Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 அதிசயங்கள்

           

 

மருத்துவ குணம் கொண்ட மரங்கள் ?

 

குன்னூர் வனத்துறை, மருத்துவ குணம் கொண்ட மரங்களின் உற்பத்தியை துவங்கியுள்ளது.வாய், தொண்டை, மார்பகம், கர்ப்பப் பை என உடலின் அனைத்து பாகங்களிலும் கேன்சர் ஏற்பட்டு, பரவி, உயிர் பலி வாங்குகிறது. நோயை கட்டுப்படுத்தி, ஆயுட் காலத்தை நீடிக்க மருந்துகள் இருந்தாலும், அவற்றை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில், விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
"
நைகோபோடிஸ் போடிடா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும், மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படும் இம்மரக் கன்றுகளை வளர்க்க திட்டமிட்டுள்ள குன்னூர் வனத்துறையினர், வண்டிச்சோலை நர்சரியில் 1,000 மரக்கன்றுகள் வாங்கி, வளர்த்து வருகின்றனர். இதேபோல, "ஆன்மிக காரியங்களில் பயன்படுத்தும் செயற்கை கற்பூரங்களில் இருந்து வெளியேறும் புகை, உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதால், "சின்னமம் கேம்பரா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்பூர மரக்கன்றுகளும் குன்னூர் வனத்துறை நர்சரியில் வளர்க்கப்பட்டு வருகிறது. குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் கூறியதாவது: கர்ப்பப்பை புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த அரளி மரங்கள் நீலகிரியில் உள்ள வனப்பகுதி, ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வசிக்கும் தோடர், இருளர், குரும்பர் இன ஆதிவாசி மக்கள், அகலமான இம்மரத்தின் இலைகளில் மோர் ஊற்றி குடிப்பதை, வழக்கமாக கொண்டுள்ளனர். மரங்களின் இலை, பட்டை, வேர் என அனைத்து பகுதிகளிலும் கற்பூர தன்மை அதிகளவு இருப்பதால், மரங்களின் பட்டை, வேர், இலைகளை உருக்கி இயற்கை கற்பூரம் தயாரிக்கப்படுகிறது. இம்மரங்களை வளர்த்து மருந்து, கற்பூர உற்பத்திக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, பால்ராஜ் கூறினார்.
மாநில பறவைக்கு பிடித்த மரம் : "கற்பூர மரங்களின் கிளைகளில் பூக்கும் பூ, காய்களில் இருந்து கிடைக்கும் விதைகள் மூலம், மரக்கன்றுகள் சாகுபடி செய்யப்படுகின்றன. மாநிலப் பறவையான மரகதப் புறாவுக்கு இம்மரங்களின் பூ, காய்கள் கொள்ளை பிரியம் என்பதால், பூ, காய்களை அவை சுவைத்து விடுகின்றன; இதனால், பல சமயங்களில் விதை பற்றாக்குறை ஏற்படுகிறது; இதை தவிர்க்க, பூ, காய் சீசன் துவங்கியுடன், அவற்றை பிளாஸ்டிக் பை போட்டு மறைத்து வைக்க வேண்டியுள்ளது; விதை தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், ஒட்டுக் கட்டுதல் முறை மூலமும், மரக்கன்று உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved