Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 அதிசயங்கள்

       ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள்


பொதுவாக அதிக குழந்தைகளைப் பெற்ற தாயை மக்களைப் பெற்ற மகராசி என்று சொல்வார்கள். அதுபோல அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை ஒரு மகராசி பெற்றெடுத்துள்ளார்.

மருத்துவ உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்பு ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டில் ஹூஸ்டன் நகரில், ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒரு வாரத்தில் ஒரு குழந்தை இறந்தது. மற்ற 7 குழந்தைகளும் அண்மையில் 10ஆவது பிறந்த நாளைக் கொண்டாடின.

தற்போது, அமெரிக்காவின் தெற்கு லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த பெல்ஃபிளவர் நகரில், ஒரு பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன.

இங்குள்ள கெய்சர் மருத்துவமனையில், கடந்த 7 வாரத்துக்கு முன் 23 வார கர்ப்பிணி ஒருவர் பரிசோதனைக்கு வந்தார். அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்த டாக்டர்கள், அப்பெண்ணின் வயிற்றில் 7 குழந்தைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிரசவம் முடியும் வரை மருத்துவமனையிலேயே தங்கியிருக்குமாறு டாக்டர்கள் உத்தரவிட்டனர்.

கர்ப்பக்காலம் முடிந்ததையடுத்து. அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அந்தப் பெண்ணுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 6 குழந்தைகளை வெளியில் எடுத்த டாக்டர்கள், வயிற்றில் மேலும் 2 குழந்தைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

முடிவில் 8 குழந்தைகளையும் வெற்றிகரமாக டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். இதில் 6 ஆண், 2 பெண் குழந்தைகள். 8 குழந்தைகளும் 69 கிராம் முதல் 1.47 கிலோ வரை இருந்தன.

இதில் 3 குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்ததால், இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. எட்டு குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் இருப்பதாகவும் கவலைப்படத் தேவையில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி மருத்துவமனையின் தலைமை டாக்டர் கரன் மேப்பீஸ் கூறுகையில், 7 குழந்தைகள்தான் உள்ளது என்று நினைத்தோம். சம்பந்தப்பட்ட பெண்ணின் வயிற்றில் 8ஆவதாக ஒரு குழந்தையிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், அந்தக் குழந்தையும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணும், 8 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.

கெய்சர் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறைந்த எடை காரணமாக இந்த குழந்தைகளுக்கு முதல் 7 நாட்கள் மட்டுமே மிகவும் அபாயமான நாட்களாகும். அதை தாண்டிவிட்டால் எந்த பிரச்னையும் இருக்காது. எனினும் 8 குழந்தைகளும் இன்குபேட்டரில் 8 வாரங்கள் இருக்க வேண்டும்.

10
வாரத்துக்கு பின்தான் மருத்துவமனையிலிருந்து தாயையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் டாக்டர் கரன் தெரிவித்தார்.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved