Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 அதிசயங்கள்

 

இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தநோயாளி திடீரென கண் விழித்த அதிசயம்

 

சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது முகத்தை துணியால் மூட முயன்ற போது நோயாளி திடீரென உயிர்த்தெழுந்தார். உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவர் இறந்து விட்டதாக மீண்டும் அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் (47). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 30ம் திகதி வண்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

 நேற்று முன்தினம் காலை அவரது உடல் நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மூடி வீட்டுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்தன. அவரது முகத்தை துணியால் மூடும் போது கண்களை திறந்து அவர் எல்லோரையும் பார்த்தார். இதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை அளித்தனர். நான்கு மணி நேரம் உயிரோடு இருந்த அவர் இறந்து விட்டதாக மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற சம்பவம் நடக்கவே இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 

 

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved