|

சிறுநீரகத்தில் இருந்த
1,72,155
கற்களை அகற்றி சாதனை
நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்த
1,72,155
கற்களை அகற்றி
மகாராஷ்டிர டாக்டர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா
மாநிலம், துலே
மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஆஷிஷ் ராவன்டாலே
பாட்டீல்.
சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணரான இவர் இன்ஸ்டிடியூட் ஆப்
யூராலஜி என்ற
பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த
ஆண்டு,
இவரிடம் தன்ராஜ்
வாடிலே என்பவர் அடிவயிறு வலிப்பதாக கூறி,
சிகிச்சைக்கு வந்தார். மருத்துவ
பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏராளமான சிறு கற்கள்
இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,
அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கற்களை
அகற்ற டாக்டர் பாட்டீல் முடிவு செய்தார்.<க்ஷழ்><க்ஷழ்>கடந்த
ஆண்டு டிசம்பர் மாதம்
8ம் தேதி,
தன்ராஜுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது,
சிறுநீரகத்தில் இருந்து மொத்தம்
1,72,155
சிறிய
கற்கள்&ய்க்ஷள்ல்;
அகற்றப்பட்டன. இந்த கற்கள் அனைத்தும்
நோயாளியின் ஒரு
சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது. இதை
சாதனையாக கருதி,
கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய அனுப்பி
வைத்தார்
டாக்டர் பாட்டீல். அவரது சாதனையை அங்கீகரித்து,
கின்னஸ் புத்தகத்தில் பதிவு
செய்துள்ளனர். பாட்டீல் நேற்று கூறுகையில்,
‘கின்னஸ் சாதனை பதிவு
அதிகாரிகளிடம் இருந்து கடந்த
10
நாள் முன்புதான் கடிதம் வந்தது. நாங்கள்
மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்’
என்றார்.<க்ஷழ்>
|