Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 அதிசயங்கள்

                                  

ஓர் உடலில் 2 இதயங்கள் துடிப்பு : அமெரிக்காவில் அதிசயம்

 

     சாண்டிகோ: அமெரிக்காவை சேர்ந்த டைசன் ஸ்மித்தை பார்த்து உனக்கு இதயமே இல்லையா... என்று யாரும் கோபப்பட முடியாது. ஒன்றுக்கு இரண்டாக அவரிடம் இதயம் இருப்பதே காரணம். கலிபோர்னியாவின் சாண்டிகோ நகரை சேர்ந்தவர் டைசன் ஸ்மித். வயது 36. அவருக்கு பிறவியிலேயே இதயக் கோளாறு. வழக்கத்தைவிட வேகமாக அவரது இதயம் வளர்ந்தது. சராசரி உடல் வளர்ச்சி நின்ற பிறகு ஒருவரது இதயம், உள்ளங்கை அளவுதான் இருக்கும்.ஆனால், டைசன் ஸ்மித் இதயம் பெரிதாகிக் கொண்டே வந்ததால், ரத்தத்தை பம்ப் செய்யும் அதன் வேலை தடைபட்டது. உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சீரியசான நிலையில் தோரன்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமல்ல என்று டாக்டர்கள் முடிவு செய்தனர்.
பிக்கிபேக் எனப்படும் இதயத்துக்கு பின்னால் மற்றொரு இதயத்தை இணைக்கும் அறுவை சிகிச்சையை டாக்டர் ஜேக் கோப்லேண்ட் செய்தார்.

அதாவது, பலவீனமான ஸ்மித்தின் இதயத்தில் சிறிதளவு கிழித்து, நன்கொடை பெற்று பாதுகாக்கப்பட்ட இதயத்திலும் அதே அளவு துளையிட்டு இரண்டையும் சேர்த்து தைத்து விடுவது. அதன்மூலம், 2வது இதயத்துக்கும் ரத்தம் பாயத் தொடங்கியது. பழைய இதயத்திலும் ரத்த ஓட்டம் இருக்கும் என்பதால் டைசன் ஸ்மித்தால் வாழ முடியும்.இதுபற்றி டாக்டர் ஜேக் கோப்லேண்ட் கூறுகையில், ‘‘இதயம் அளவுக்கு அதிகமாக, வேகமாக வளர்ந்தால் ரத்தத்தை பம்ப் செய்யும் திறனை இழக்கும். அந்த விசித்திர பிரச்னையில் இருந்த டைசனை காப்பாற்ற 2வது இதயம் பொருத்துவதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.இதுபோன்ற அறுவை சிகிச்சை சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பே தென்ஆப்ரிக்காவில் நடந்துள்ளது. இவான் டெய்லர் (58) என்பவருக்கு டாக்டர் கிறிஸ்டியன் நீத்லிங் பெர்னாட் என்பவர் செய்துள்ளார் என்பது மருத்துவ அதிசயம்.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved