|

லண்டனில் இதயத் துடிப்பு நின்று இறந்தவர் நவீன
கண்டுபிடிப்புக்களின் உதவியால் உயிர்பிழைத்த
அதிசயம்
வயதாகும் அருண்
பாசின் கிரோய்டன் பகுதியில் வசித்து வருகிறார்.
பிரித்தானியாவில் கடந்த
டிசம்பர் மாதம -10
டிகிரிக்கும் குறைவாக கடுங்குளிர் நிலவிய வேளையில் இவர்
திடிரென செயலிழந்ததால் அருகில் உள்ள கிரோய்டன் பல்கலைக்கழக
மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு இவருக்கு மார்படைப்பு ஏற்பட்டதை
மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இவரின் இதயத் துடிப்பு முற்றிலும் நின்று இறந்து போய் விட்டதும்
உறுதி
செய்யப்பட்டது. உடனடியாக இரண்டு முன்னணி
மருத்துவர்கள் இவருக்கு
சிகிச்சையளிப்பதில் மும்முரமாக இறங்கினர்.
புரட்சிகரமான புதிய கருவி
ஒன்றின் மூலம் அண்ணளவாக 3
மணி நேரங்களுக்கும் மேலாக அருணின் இதயத்திற்கு
அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்தக் கருவி நிமிடமொன்றுக்கு நூறு முறை
அழுத்தும் திறன் கொண்டது.
20,000
முறை அழுத்திய பின்னர் நின்றிருந்த அருணின்
இதயம் மீண்டும் துடிக்க
ஆரம்பித்தது. தற்போது தொடர்ந்தும் இதயத் துடிப்பு சீராக இருக்க
பாட்டரி
மூலம் மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தான் உயிர் பிழைத்தது மிகப் பெரிய
அதிசயம் என்கிறார் அருண்
|