Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 அதிசயங்கள்

 

பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய சிறுவன்

 

மருத்துவ உலகில் பெரும் புதிராக சிறுவன் சம்மி ஹாரி உள்ளான். இந்த சிறுவன் பாதி இதயத்துடன் பல ஆண்டுகளாக உயிர் வாழ்வது மருத்துவ நிபுணர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சம்மிக்கு தற்போது 7 வயது ஆகிறது. இந்த சிறுவன் பிறக்கும் போதே பாதி இதயத்துடன் தான் பிறந்தான். அவன் பிறந்ததும் பரிசோதனை செய்த போது சம்மிக்கு பாதி இதயம் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை சம்மி இதயத்தின் அறைகளில் ஒன்று மட்டுமே செயல்படுவது தெரியவந்தது. ஒரு வெண்ட்ரிக்கிள் அறையில் மட்டுமே ரத்த ஓட்டம் செல்வது மனித உயிருக்கு ஆபத்தானது.

எனவே குழந்தை சில நாட்கள் உயிர் வாழ்வதே பெரிய விடயம் என நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் சம்மி மருத்துவ உண்மைகளை பொய்யாக்கும் வகையில் தற்போது 7 வயது வரை எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான்.

அந்த சிறுவன் மற்ற சிறுவர்களைப் போலவே கால்பந்து விளையாடுகிறான். வேகமாக ஓடி ஆடும் போது எந்த வித சோர்வும் அவனைத் தாக்கவில்லை. கேம்பிரிட்ஜ் மும் எலீன் கூறியதாவது: ஒரு வாரம் கூட உயிர் வாழ மாட்டான் என கருதப்பட்ட சிறுவன் சம்மி தற்போது சக நண்பர்களுடன் கால்பந்து ஆடுவது மகத்தான விடயம். அவனை கூர்ந்து கவனிக்கிறோம் என கூறினார்.

மற்ற சிறுவர்களைப் போல சம்மி ஓடவும், நீச்சல் அடிக்கவும் செய்கிறான். அவனது சகோதரி மற்றும் 2 சகோதரர்களுடன் அடுத்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறான்.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved