Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 அதிசயங்கள்

 

16 வயது அதிசய குழந்தை!

 

புரூக் கிரீன் பேர்க் எனும் 16 வயது யுவதிக்கு இன்னும் இரண்டு வயது கூட ஆகவில்லை. என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆம் இவரின் வயது 16. ஆனால் நேரில் பார்த்தால் 2 வயது சிறுமியைப் போன்ற தோற்றமே காணப்படுகிறது. இந்த அதிசயச் சிறுமியின் எடை வெறும் 16 பவுண்ட் தானாம். உயரம் 30 அங்குலங்கள். அதிசய நோய் ஒன்று தொற்றியுள்ளதால் இவரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான மூளை வளர்ச்சி குறுகிய அளவே இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக உடம்பின் பெரும்பாலான பகுதிகள் ஒரே அளவாக வளர்ச்சி இன்றி உள்ளதாம்.

ஏனைய யுவதிகள் போல் பட்டாம்பூச்சியாக வலம்வர வேண்டிய புரூக் தனது சகோதரிகளின் (அவளை விட வயது குறைந்த) கைகளில் சின்னக் குழந்தையாக தொத்திக் கொண்டிருக்கிறாள். இவளின் உடல் வளர்ச்சி தடைப் பட்டுள்ளதால் இனியும் இவள் வளர்வது சந்தேகம் தானாம்.

வளர்ந்த பின்னர் பிள்ளைகள் செய்யும் குறும்புகள் காரணமாக தமது பிள்ளைகள் சின்னவர்களாக இருந்தால் எவ்வளவு நல்லது என சில பெற்றோர் நினைப்பதுண்டு. ஆனால் அதுவே உண்மையாகியுள்ள போதும் புரூகின் பெற்றோர் இவள் குழந்தையாகவே இருப்பதை பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லை. உலகில் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டு வளராமல் இருப்பது இவள் மட்டும்தான்.

 

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved