|
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

“ஒன்றே
குலம்
ஒருவனே
தேவன்”
என்று உணர்ந்து
உலகிற்கு
உரைத்த
திருவள்ளுவர்,
திருமூலர்
முதலான
ஞானிகள்
வரிசையில்
வந்தவர்
மகரிஷி.
சாதி சமயம் கடந்து,
இனம் நாடு வரம்புகள் கடந்து
மனித குலத்திற்கு இன்றைய சூழ்நிலையில் தேவையான
வாழ்வியல் கல்வியை
–
உடல் நலம்,
மனவளம்,
உயிர் உணர்வு
என்ற மூன்று கூறாக வகுத்து
–
பயிற்சி முறையுடன்
இணைந்து கடந்த
55
ஆண்டுகளாக
போதித்து வந்த
நவீன புத்தர்.
இவரது வாழ்க்கைக் காலம் 1911 தொடக்கம் 2006
வரை ஆகும்.
இவரது கல்வி,
பயிற்சியை மேற்கொண்டு
Vision
என்ற
பட்ட,
பட்டயப் படிப்புகளை சில
பல்கலைக் கழகங்களில்
பயிற்றுவிக்கின்றன.

சிந்தனைக்கு
அளவோடு உணவு உண்டால் உடல் உணவைச் சீரணிக்கும்
அதிகமாக உண்டால் உணவு உடலைச் சீரணிக்கும்
மனத்தை அடக்க நினைத்தால் அலையும்
மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்.
எண்ணம்,
சொல்,
செயல் எல்லார்க்கும் நன்மை தரா,
எண்ணும் படி செய்.
செய்யும்படி எண்ணு!
உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்
உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே!
உண்ணும் உணவு உடல்மட்டும் பாயும்!
எண்ணும் எண்ணம் எங்கெங்கும் பாயும்!
அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு!
அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு!
ஆற்றலின்மை,
அச்சம் இவையிரண்டும்
கவலையினைப் பெருக்கும் கனத்த மனநிலையாகும்!
தப்புக் கணக்கிட்டு தானொன்று எதிர் பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி?
ஒறுத்திடும் உன்னை உடனுக்குடன்!
ஒழுங்கு அமைப்பை உள்ளபடி அறிந்து நடந்தால்
எப்போதும் துன்பமில்லை! இன்பமே எந்த நாளும்!
தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும்
கிடையாது!
தீர்க்கும் வழியைத் தீர்க்கமாக அறியாதவர்களே
உண்டு!
திறக்கமுடியாத பூட்டு கிடையாது! சரியான
சாவியைக்
கண்டுபிடித்து
தளராமல் பயன் படுத்தாதவர் உண்டு!
செயலிலே விளைவாகத் தெய்வ ஒழுங்கமைப்பு
சீராக இயங்க,
பயன் என்ன தவறிழைத்தும் பின்
பரமனை வேண்டுவதால்?
புகழை விரும்பினா அந்த விருப்பமே
புகழ் அணுகாமல் துரத்தும் சக்தியாகும்;
அன்புடன் தொண்டு செய்தால்,
அதுவே புகழை அழைத்து வரும்!
தனிமனிதனால் சமுதாயமும்,
சமுதாயத்தினால்
தனிமனிதனும் ஆக்கவும் காக்கவும் படுகிறார்கள்;
இன்று சமுதாயம் என்பது உலக மனித சமுதாயம்
முழுவதையுமே குறிக்கும்!
தனி மனிதன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும்
இனிதே வாழ வேண்டுமானால்,
உலக மனிதசமுதாயம்
முழுமையுமே
புனித அமைதியிலும் மகிழ்ச்சியிலும் இருந்திட
வேண்டும்!
ஆராய்ச்சியில்லாத நம்பிக்கை
தாழ்ப்பாள் இல்லாத கதவு போல ஆகும்!
வாங்கும் கடன் வளர வளர வாழ்வில் துயரமே!
தேங்கும் செல்வம் திரள திரள திகிலுடன்
துன்பமே!
வரம்போடு வாழுங்கள்! வாரித் தாருங்கள்!
வையகம் முழுமையும் இன்ப மயமே!
வாழத்தெரியாதோர் பலர் வாழும் நாட்டில்
ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடை பெறும்!
பணத்திற்கும் பண்புக்கும் நடக்கும் போட்டியில்
குணத்தில் மனிதன் குறைந்தோனாகி வருகிறான்!
வஞ்சகர் எதிரிகளாய் வந்துவிட்டால்
அஞ்ச வேண்டியது ஒன்றும் இல்லை
ஆனால்
நண்பர்களே நயவஞ்சகராய் நடந்து கொண்டால்,
அதுவே
நல்ல பாம்பின் நஞ்சைவிட நடுங்கும் தொல்லை!
குறிதவறி துப்பாக்கி வெடித்தால் கொடிய
தோல்வியால் விழுவாய்!
நெறிதவறி செயல் செய்தால் நேர்ந்திடும்
விளைவில் அழுவாய்!
பனற ஒலியால் பண்ணோடு இசை பயனற்று காண்பதுபோல்
குறை காண்போர் அறிவால் நற்குணங்கள் குன்றி
மங்கிவிடும்!
நேர்மையும் நியாயமுமான போராட்டங்கள்
நிலை குலைந்து போகலாம் சில வேளைகளில்;
ஆனால்
சத்தியமும் தருமமும் தலைகுனிந்து சாஸ்வதமாக
தாழ்ந்ததாக சரித்திரத்தில் இல்லை.
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து!
ஊக்கமுடன் உழை! உயர்வு உறுதி!
உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
உள்ளுவதும் செய்வதும் உனது நித்தியக்கடன்!
உடையில் கச்சிதம்,
கண்ணியம்,
உள்ளத்தில் பச்சாதாபம்,
பரிவு,
நடையில் அச்சமின்மை,
கம்பீரம்,
நல்ல ஆளுமைப்பேறின் அடையாளங்கள்!
உணவில் எளிமை
உழைப்பில் கடுமை
ஒழுக்கத்தில் உறுதி
உத்தமரின் உயர்வு
கடவுள் + ஆணவம்
=
மனிதன்
மனிதன் - ஆணவம்
=
கடவுள்
பொறியியலாளர் சோஷசலம்
|