Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

 நீதி நூல்களில் ஒன்றான நாலடியாரில் வரும் செய்யுள்

 

"உடைப்பெருஞ் செல்வரும் சான்றோருங் கெட்டு
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகி - கடைத்தலைக்
கண்ணது ஆகி குடைக்கால் போல் கீழ்
மேலாய் நிற்கும் உலகு."

சான்றோர்கள் தம் நிலைமையிலிருந்து கீழே தள்ளப்பட்டு விட்டதைக் காட்டுகிற அதே நேரத்தில்,    புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகி விட்டனர் என்பதைக் காட்டுகிறது.    இந்த நிலவரத்தைத் தலைகீழ் மாற்றம் என்கிறது.

அடுத்து மற்றோர் நீதி நூலான பழமொழி நானூறு சொல்வதாவது:

 

"உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கு அருவி வெற்ப - அதுவே
சுரை ஆழ அம்மி மிதப்ப."

அதாவது வாய்மையும்,    சொல்வன்மையும்,    நீதி தவறாமையும் கொண்ட சான்றோர்கள் ஒடுக்கப்பட்டு விட்டனர்.    நிரை அற்றவர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.    இது நீரில் மிதக்கும் இயல்பு கொண்ட சுரைக் குடுவை நீரில் அமிழ்ந்து இருப்பது போலவும்,    நீரில் அமிழக்கூடிய இயல்பு கொண்ட அம்மிக்கல் மிதப்பதற்கு ஒப்பானது என்கிறது.    அதாவது ஆட்சியில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதைப் பதிவு செய்துள்ளது.   தகுதியற்றோர் ஆட்சிக்கு வந்து விட்டதை குறித்துக் காட்டுகிறது.

அதாவது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களின் இயல்பையும்,    அவர்கள் சார்ந்த மக்கள் கூட்டத்தின் இயல்பையும் வெளிப்படுத்துகிறது எனலாம்.    தமிழகத்தில் வேளாளர் சார்ந்த சமூக ஆவணங்கள் அவர்களை களப்பிரருடன் தொடர்புபடுத்துகின்றன.    உதாரணமாக,    பாண்டிய மன்னனின் மெய்கீர்த்திகளில் ஒன்று    'மேகத்தை சிறை வைத்தவன்'    இந்த மேகத்தைச் சிறை மீட்டவன் இந்திரன் என்பதுடன் அதற்குப் பிணையாக கார்காத்த வேளாளர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.    கார்காத்த வேளாளர் என்கிற பெயரே அவர்களுக்கும் மழை பொழிவிக்கிற மேகத்துக்குமான தொடர்பைக் காட்டும்.    வேளாளர் சமூக ஆவணங்களில் 'மேகந் தளை விடுத்து'   என்று சொல்லப்பட்டுள்ளது.    மேலும்,    மூவேந்தர்களை சிறைப் பிடித்து தமிழ்ப்பாட வைத்ததாகவும் வேளாளர் சமூக ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது.    இவையே களப்பிரருக்கும் வேளாளருக்குமான தொடர்பைக் காட்டுகிறது. .

 


Home

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved