Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 நகைச்சுவை

 

 

 நக்கல் ராசி பலன்கள்

 

மேஷ ராசி மக்களே!

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூனாவது மாடிக்கு
குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா
0
க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில
போய் ஒளிஞ்சிக்கோங்க!

மேலும் நீங்க இங்கிலீசுல, 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'
ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர்
ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா,
கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம்
டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

 



ரிஷப ராசி மக்களே!

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது.
98.3
டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா
உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி
நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாத
தெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு,பாதகாதிபதியான
சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு
எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது
இடம் கிடைக்கும்.

பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை
பால்' குடிக்கிறது நல்லது.

 



மிதுன ராசி மக்களே!

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே,
அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது,
காதாலயும் தொடக்கூடாது.
குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம்
பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும்
பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம்.
இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய்
விளக்கு போடணும்

 



கடக ராசி மக்களே!

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுறநீங்க,
இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது.
அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா
ஓடுறது நல்லது.

ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட
அஞ்சாவது வீட்டைக் குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய்
மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல
சனி இருக்கறதால,உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய்,
பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று
தேடிப்பாருங்கோ!

 



சிம்ம ராசி மக்களே!

 


குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login'
ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது.
சாட் ஆகவே ஆகாது.

'orkut, facebook'
பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.
முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே
வரக்கூடாது.

ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால,
மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா
சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு
வடைமாலை சாத்தறது உத்தமம்.

 

 


கன்னி ராசி மக்களே!

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும்
உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது.
வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு
போயிடறது நல்லது.

முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது
நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே
தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.
.
என்னுரை: இதற்குப் பரிகாரம் எழுதி, அடுத்து உள்ள ஆறு ராசிகளுக்கும்
பலன் எழுதுவதற்குள், அந்த ஜோதிடர் கடத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்
திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து அவர் எழுதிய கலக்கல் பலனில்
கோபமுற்ற சில கட்சிக்காரர்கள் சேர்ந்து அவரைக் கடத்திக் கொண்டு போய்
விட்டதாகத் தெரிய வருகிறது.

தேர்தல் முடிந்து திரும்பி வந்து, 'கை' இருந்தால், விடுபட்ட பகுதியை அவர்
தொடர்ந்து எழுதுவார். பொறுத்திருங்கள்

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved