|
டாக்ட ர் : நெஞ்சு
வலியால உங்க கணவர் துடிச்சிப் போய்
அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க
கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு
இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும்
கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன்
டாக்டர்!"
JJJJJ
ஒருவர்: என் ஆபரேஷனுக்கு
டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல
ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க?
டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல
அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான்
நீங்க...!
JJJJJ
நோயாளி :
என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு
இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க
டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு
ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா
ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற
மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது
அந்தப்பொண்ணு!
JJJJJ
ஒருவர்: இதென்ன, பூமாலையை
இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன்
சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன்
கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்! |