|

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?
இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.
சின்னதாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியை உங்கள்
அலுவலகத்திற்குள்ளாகவே
உருவாக்கி அடுத்த்து யார் வேலையிலிருந்து
விடுபடப் போகின்றார் என்பதை
கண்டறியுங்கள்.
2.
உங்க பாஸிற்கு சும்மா சும்மா பிளங்க் (Blank)
கால் பண்ணுங்கள்.
3.
உங்க
Yahoo IDயில்
இருந்து
GMailக்கு
ஒரு மெயில் அனுப்புங்க. உடனே
GMailஐ
திறந்து பாருங்க. மெயில் வர எவ்வளவு நேரம்
ஆகுதுமன்னு செக் பண்ணுங்க. இந்த
முறையை அப்படியே ரிவர்ஸில் செய்யுங்கள்.
4.
மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி,
பிரிண்டர் ஆகியவற்றை இடமாற்றம் செய்து
அவர்களுக்கு கோபம் வரச் செய்யுங்கள்.
5.
உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள். இன்னும் போர்
அடிக்கிறது என்றால் கால் விரல்களையும்
சேர்த்து எண்ணுங்கள்
6.
மற்றவர்கள் வேலை செய்யும்போது அவங்க
முகபாவனங்களைப் பாருங்கள். கண்டிப்பாக
உங்களுக்கு சிரிப்பு வரும். உங்கள்
முகபாவனங்களையும் மாற்றுங்கள்
அவ்வப்போது. அப்போதுதான் நீங்கள் வேலை
செய்வதுப்போல் தோன்றும்.
7.
இரண்டு மணி நேரம் சாப்பிட
எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை
அலசுங்கள்.
8.
விசில் அடிக்க பழகிக்கொள்ளுங்கள்.
9.
போன வாரம் அல்லது போன மாதம் நாளிதழைத்
திரும்பவும் படிங்க.
10.
தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து
குப்பைத்தொட்டியில் எரிய பயிற்சி எடுங்கள்.
11.
தொலைபேசியை எடுத்து தற்போது உபயோகத்தில்
இல்லாத எண்களுக்கு போன் போடுங்கள்.
12.
உங்கள் க்ணிணியில் ஓரே சமயத்தில் எத்தனை
அப்ளிகேஷனை திறக்க முடியும் என்று சோதித்துப்
பாருங்கள்.
13.
கணிணியில் தேவையில்லாததை அழியுங்கள். பிறகு
Recycle Binல்
இருந்து
ரீ-ஸ்டோர் செய்து விளையாடுங்கள். திரும்ப
திரும்ப இதையே செய்யலாம்.
14.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நாற்காலியில்
எவ்வளவு தூரம் சாய முடியுமோ அவ்வளவு தூரம்
சாய்ந்து பாருங்கள்.
இதை செய்தால் உங்கள் அலுவலகத்தில்
நீங்கள்தான்
Busyஆன
ஊழியர்.
|