Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 நகைச்சுவை

 

 

     

 

புரியாத கேள்விக்கு விளங்காத பதில்

 

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த அறிவு உடையவனாக இருந்தான்.
அவனது நுணுக்கமான பேச்சினை அறிவு நிறைந்தவர்களே புரிந்து கொள்ள முடியும்.

தனக்கு மனைவியாக வருபவள் தன்னைப் போன்றே அறிவு உடையவளாக இருக்க வேண்டும் என்று
நினைத்தான். அதனால் தன்னை மணம் செய்ய முன் வந்த இளவரசிகளையும்
மற்றவர்களையும் சோதனை செய்து பார்த்தான்.

யாருமே அவனுக்குப் பொருத்தமாக தெரியவில்லை.

தனக்கு திருமணமே நிகழாதோ என்ற கவலையில் அரசன் உலாவிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது விறகு வெட்டி ஒருவன் அங்கு வந்தான்.

அரசனின் எண்ணத்தை அறிந்த அவன் "அரசே! என் மகள் அறிவுக்கூர்மை உடையவள்
உங்களுக்குப் பொருத்தமானவள். அவள் அறிவைச் சோதனை செய்து பாருங்கள்" என்றான்.

இதைக் கேட்ட அரசன் வியப்பு அடைந்தான். "நீ சொல்வது உண்மையாக இருந்தால் உன்
மகளைத் திருமணம் செய்து கொள்வேன். இல்லாவிட்டால் உன்னையும் உன் மகளையும் கொன்று
விடுவேன். நாளை காலையில் அரண்மனை வேலையாள் ஒருவன் உன் வீட்டிற்கு வருவான். போய் வா"
என்று சொன்னான்.

வீடு திரும்பிய விறகு வெட்டி நடந்ததை எல்லாம் தன் மகளிடம் சொன்னான்.

பொழுது விடிந்தது.

அரசன் ஒரு வெள்ளித் தட்டில் சில ரொட்டிகளையும் இன்னொரு தட்டு நிரம்ப வெண்ணையும்
வைத்தான். ஒரு கிண்ணம் நிரம்பப் பாலை ஊற்றினான்.

வேலையாளை அழைத்து "நான் சொல்வதை அப்படியே அந்தப் பெண்ணிடம் சொல்லி இந்தப்
பாத்திரங்களைக் கொடு. அவள் என்ன சொல்கிறாள் என்று கேட்டு வா" என்றான்.

அந்த வேலையாளும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு விறகு வெட்டியின் வீட்டை
அடைந்தான்.

அப் பெண்ணைப் பார்த்து, "வாரத்திற்கு ஏழு நாட்கள். இன்று முழுநிலவு. மழை பெய்ததோ
இல்லையோ குளம் நிரம்பி வழிகிறது" என்றான்.

அந்தப் பெண், பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள். வேலையாளிடம் அவள் "வாரத்திற்கு
ஐந்து நாட்கள்தான். இன்று முழுநிலவு அல்ல. பாதி நிலவுதான். மழை பெய்ததோ இல்லையோ குளம்
வறண்டு காட்சி அளிக்கிறது என்று அரசனிடம் சொல்.

அரசர் கோபத்துடன் உன்னை அடிக்க வருவார். நான் செய்த தவறினால்தானே நம் நாட்டிற்கு அரசி யார் என்பதைக் கண்டறிய
முடிந்தது என்று சொல் என்றாள்.

வேலையாளும் ஒழுங்காகச் செய்ய வில்லை.ஏமாற்றுக்காரனாக இருக்கிறாயே . உன்னைக் கொன்று விடுகிறேன்" என்று
கத்தினான்.

நடுநடுங்கிய வேலையாள் அந்தப் பெண் சொன்னபடியே "அரசே! நான் செய்த தவறினால்தான் நம்
நாட்டிற்கு யார் அரசி என்று அறிய முடிந்தது" என்றான்.

இதைக் கேட்ட அரசன் அமைதியானான்.

தனக்கு ஏற்ற அறிவுள்ளவள் அவள்தான் என்பதை உணர்ந்தான். ஒரு நல்ல நாளில்
அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

அரசனின் புரியாத கேள்விக்கு அந்தப் பெண் அளித்த பதில் என்னவாக இருக்கும்?

வாரத்திற்கு ஏழு நாட்கள். இன்று முழுநிலவு, மழை பெய்ததோ இல்லையோ குளம் நிரம்பி வழிகிறது' என்ற தொடரின்
பொருள் 'அந்தப் பாத்திரத்தில் ஏழு ரொட்டிகள், முழு உருண்டையாக வெண்ணெய், கிண்ணம் நிரம்பப்
பால் உள்ளது' என்பது ஆகும்.

இதை உணராத வேலையாள் யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்து, அதிலிருந்து இரண்டு ரொட்டிகளையும் பாதி
வெண்ணையையும் பால் முழுமையும் குடித்து விட்டான்.

பாத்திரத்தைப் பிரித்துப் பார்த்த அந்தப் பெண் எல்லாம் குறைவாக இருந்ததால் அப்படிப் பதில்
சொன்னாள்

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved