|

ஏன் வந்தாய் எனக்குள்ளே..?
தினமும் போடுகின்றேன்
முகவரியில்லாமல் கவி மடல்களை
உன் முகவரியில் வந்து
சேரும்
என்ற நம்பிக்கையில்...
இதயம் துடிக்கும் வேகம்
இரண்டாக அதிகரிக்கின்றது
பகல் வெளிக் காலம்
பனித்துளியாய் மறைகின்றது
தெரிய வில்லை எனக்கு
உன் இதயம் எனக்குள்
புகுந்ததென்று...
பனிமலையாய் படர்ந்த காதல்
எரி மலையாய் வெடித்ததேனோ..?
பார்த்த நிமிடங்கள் அகலாமல்
கண்ணுக்குளே உள்ளதேனோ..?
இணையத்தில் இணைந்த காதல்
இரவுத்தூக்கத்தை தொலைக்கிறது
இரக்கப் பட்டு பிரிந்த பின்பு
இதயம் நின்று தவிக்கின்றது..
மகராசிதான் நீ..
மாதமொன்று
மனம் திறந்து பேசினாய்,
இப்போ மறைவாய் நின்று
மறந்துவிடச் சொல்கின்றாய்
மனசைக் குடைந்து
பந்தாய் பதுக்கி வைத்தேன்
மேகக் கூட்டமாய்
மௌனமாய் கலைந்து விட்டாய்.
நண்பர்களின் உதவியை நம்பி
நான் காதல் செய்தேன்.
பெற்றோரின் செய்கையறிந்தா
நீ காதல் செய்தாய்?
என்னை விட்டுச் செல்ல...
பேருந்தின் பின்னே
பின் தொடரும் தூசிக்களாய்
தொடர்ந்து வருகிறதடி
நினைவுகள் உன் பின்னே..
தெரியமல் தவிக்கின்றேன்
ஏன் வந்தாய் எனக்குள்ளே?
இதயத்தைக் கிழிப்பதற்கா.?
கிழிந்த இதயத்தோடு
வாழ்த்துகின்றேன் உன்னை
வாழ்க நீ நூறண்டு .........
சாகும் வரை அதுதான்
என் நினைவாண்டு ...
|