சாதனை புரிவீர் சிறுவர்களே
சாதி சாதி என்பதெல்லாம்
சாதித் துயர்ந்த இளைஞ ரெல்லாம்
போதிக் கும்சொல் லெனக்கொள்வோம்
புதிய சாதனை புரிந்துவெல்வோம்!
சாதிப் பிரிவுகள் நாம்
மறப்போம்
சாத னைபுரிந்து நாம் சிறப்போம்
ஓதும் மதங்கள் அத்தனையும்
உயர்த்தும்நெறிகள் நாம்
மதிப்போம்!
ஓடும் வினாடி முள்ளைமுந்தி
கூடி உழைப்போம் உள்ளமொன்றி
நாடித் தொழில்கள் தழைத்திடவே
நாட்டை வளர்ப்போம்
முதலிடத்தில்!
சாதிப் பதன்றி நம் மனத்தில்
சாதி மதங்கள் அகற்றிடுவோம்
மேதி னியில் நாம் இந்தியர்கள்
விந்தை புரியும் சிந்தையர்கள்!
உலகம் விரும்பி வரவேற்கும்
ஒளிரும் கூரிய மதியுடையோம்
கலகம் விலக்கிக் கலைஞானம்
கமழும் அமைதி தினம் படைப்போம்!
இந்தி யரென்றால் உலகமெங்கும்
இனிமை அமைதி நலம் வளர்க்கும்
சிந்தை நிறைந்தார் எனப்போற்றச்
சிறந்து செயல்கள் ஆற்றிடுவோம்!
சாதி மதத்தின் வேர்பிடுங்கி
சாத னைகளாற் பேர்விளங்கி
மோதும் வன்முறைச்
சிறகொடிப்போம்
முந்தி உலகில் நாம் நிற்போம்!
-கொல்லங்குடி
உடையப்பன்
|