|
கானவி
இணையத்தளத்திற்காக அன்புடன்
பொறியியலாளர் அவர்கள் எழுதிய
கவிதை...

பொறுத்திரு சில காலம்,
நீ பூமி ஆள்வாய்
தமிழா
புலம் பெயர்ந்த தமிழ்ப்
புதல்வா நின்
நலம் விழையும் நல்லன்பர் நாம்!
ஈழ
மண்ணை எண்ணி எண்ணி நாளும்
கலங்கியே வடிக்கின்றாய்
கண்ணீர் வெள்ளம்!
துடிக்கின்ற எங்கள் சொந்த
நெஞ்சம்
துணையாய் நில்லாதது துரோக
வஞ்சம் அல்ல!
நடிக்கின்றோமா நல்லோர்
போலென்று வெறுத்து
நயந்திடாமல் எங்களை
நறுக்கென்று ஒதுக்கிடாதே!
சோதனைக்கு ஆளான துயர சோதரனே,
ஆதரிக்கும் அன்புமனம் இங்கே
உண்டு!
வேதனை தீர்த்து விடிவு காண
விழைந்து
விரைந்தாற்றும் வீர விவேகிகள்
உண்டு!
பொறுத்திரு சில காலம் பூமி ஆள்வாய்!
அறத்தின் தீர்ப்பு அசையாமல்
பலித்திடும்!
புகலிடமாய் போன இடத்தில்
பொருந்தி நில்!
வகைபலவாய் வாய்க்கும் திறனை
வளர்த்துக் கொள்!
பாட்டுத்திறத்தாலே
இவ்வையத்தைப் பாலித்திட
பாரதி வருவான் அமைதியோடு
பார்த்திரு!
கூட்டுத் தமிழ் உணர்வை
கொஞ்சமும் இழக்காதே!
குவலயம் ஏற்கும் நம் கோரிக்கை
கூடி வரும்!
வாழ்க வளமுடன்.
பொறியியலாளர் சோஷசலம்
Home
|