|
நதியும் நம் தமிழும்!

“கலகல”
என்றும்
“சலசல”
என்றும்
“கடகட”
என்றும்
“மடமட”
என்றும்
“சடசட”
என்றும்
“தடதட”
என்றும்
தடைகளைக் கடந்து நடைபயில் நதியே!
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு காட்சி!
ஒவ்வொரு மலரின் எவ்வகை மணமும்
உன்னிடம் உண்டு உணர்ந்தேன் நுகர்ந்து!
ஓவியன் உள்ளம் உன்னுடை ஆட்சி!
மயிலின் ஆடலும் குயிலின் பாடலும்
மதியின் ஒளியும் மலரின் எழிலும்
வண்டின் இசையும் மங்கையின் அசையும்
நதியின் நடையில் நன்றாய் மிளிரும்.
குழலின் ஒலியும் குழந்தை மழலையும்
யாழின் மீட்சியும் யானையின் காட்சியும்
முழுமதி பொழிவும் முத்துச் சிரப்பும்
தமிழின் சுகமும் நதியின் முகமும்
மகிழ்வே மகிழ்வே மிகமிக மகிவே!
அகமும் மலர தமிழ்மகன் நகுவான்!
நகைப்பை முழக்கி நடத்துக லோகம்!
பகையை முடிக்க அதுவே யோகம்!
தி.மா.சேஷாசலம்.
பொறியாளர்
Home
|