|
நதியே! நதியே!

ஓடுகிறாய் ஓடுகிறாய் ஒய்யார நதியே!
ஓடுகின்ற உன்னழகை உற்றுப் பார்த்து
பாடாத பாவலர் பாரில் இல்லையே!
பாடுகிறாய் பாடுகிறாய்
“சலசல” பாட்டு
பாட்டுக் கேட்டுத் துள்ளி பரவசப் படாத
பச்சிளங் குழந்தையை நாம் பார்த்ததில்லையே!
ஆடுகிறாய் ஆடுகிறாய் ஆவேச நடனம்!
ஆனந்தத் தாண்டவம் அருகில் கண்டு
ஆச்சரியப் படாதார் யாரும் இல்லையே!
வாடுகின்ற ஈழத்தமிழர் வாகை சூட
நாடுகின்றோம் உன்னை நதியே ஒன்று கூடி
ஓடுகின்ற வேகத்தில் ஆத்ம தாகம் தீர்ப்பாய்.
தி.மா.சேஷாசலம்.
பொறியாளர்
Home
|