|
முயற்சியின்றியே முன்னேற முடியும்!

பட்டினம சென்று
கட்டணம் செலுத்தி
கல்லூரி சேர்ந்து
கல்வி கற்று
பயிற்சி பெற்று
முயற்சி செய்து
பிறகு தான்
நீந்த நினைத்ததா மீன்?
துள்ளத் தொடங்கியதா மான்?
இல்லையே! இயற்கையின்
இயல்பூக்கம் தானே!
இறைவன் படைப்பில்
உயர சிகரம் நீ!
எண்ணிய முடிக்க
திண்ணமே வேண்டும்
சிந்திக்க தெரிவாய்!
சிரிக்க அறிவாய்!
திறமிகு கற்பனையால்
சிறகு விரிப்பாய்!
வானில் பறப்பாய்!
வையத்தில் சிறப்பாய்!
சொந்தச் சகோதரர்
துன்பத்தில் துவண்டு
வெந்திடக்
கண்டு
சிந்திடு கண்ணீர்!
நயவஞ்சகம் நசிந்திட
நலிந்தோர் நலம் பெற
நாளும் நயந்து
நாயகனை நாடு!
மங்கும் தீமை
பொங்கும் நலமே!
எங்கும் இன்ப உரிமை
தங்கும் இனியே!
மனிதனே நின்
மனமெணும் கருவி
அதிசயமே! ஆண்டவன்
அருளிய மதிவளமே!
பாடும் குயிலும்
ஆடும் மயிலும்
வீசும் தென்றலும்
பேசும் கிளியும்
முயற்சி இன்றியே
இயற்கையில் நடக்கும்
இயல்பான நிகழ்ச்சிகள்!
இல்லை என்பார் யாரே?
முயற்சி இன்றியே
முடியும் வென்றிட!
அதிர்ச்சி நீக்கி,
அயர்ச்சி போக்கி,
அனைவரும் ஒன்றிட
அடைவோம் விடுதலை!
ஆற்றல் மன செயம்
ஆனந்த ரகசியம்!
பொறியியலாளர் சோஷசலம்
Home
|