|
கனவு நிஜமாகும்

நாம் காணும் கனவு கதைகள்
நாளைய நிஜத்தின் நல்ல விதைகள் !
உறங்கிக் கிடக்கும் சிறுவிதைக்குள் ஓர்
உயர்ந்த ஆலமரம் உளிந்திருக்குது பார் !
மயங்கிக் கிடக்குது ஒரு முட்டைக்குள்
வானில் பறக்கும் வல்லூறு தான் !
ஆன்ம லட்சிய அழகிய தரிசனத்தில்
அற்புத சிலிர்ப்பு தேவதை காண் !
அற்பக் குணங்கள் அகன்று விட்டால்
நட்பும் உறவும் நமது பலமாகும் !
ஈழத் தமிழஉன் தம்பியடா! அவன்
வாழும் வாழ்க்கை உன்னை நம்பியடா !
அண்ணன் தம்பி அன்பிருந்தால்
அக்கிரமக் காரன் அலறிடுவான் !
எண்ணத் தூய்மை எய்திவிட்டால்
வண்ணக் கனவு வாழ்வில் நிஜமாகுமடா !
தி.மா.சேஷாசலம்.
பொறியாளர்

Home
|