இரவு
இரவு
நிறத்தை இழந்து கொண்டிருக்கிறது
நிறத்தை இழந்து கொண்டிருக்கும்
இரவின்
நாளைய
புதிய நிறத்தைப் பற்றிய
விவாதங்கள் தொடர்கின்றன
கருமை மறைக்கப்பட்டால்
நிலா
நட்சத்திரம்
மினுமினுப்பை இழக்க நேரிடும்
காலங்கள் அதிவேகமாய் ஓடி
வருகின்றன
இரவின் நிறத்தை
பிடுங்கிச் செல்ல
காற்றின் வேகம்
காலங்களின் வருகையை
திசை மாற்றம் செய்வதால்
இரவுக்கு
அதன் நிறத்தை இழக்க
இன்னும் அவகாசம் உள்ளது…
வீ. அ. மணிமொழி
|