Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

  கவிதை

உலகம் அழிந்தாலும் நம் நட்பு அழியாது  

வழியினில் கண்டுகொண்டேன்
உன் வருகையை எளிதினில்
நட்புக்கும் உண்டாம் தேடலும்

உண்மையை உணரும் குணமும்
ஒழியாத அறிவின் உன்னதமும்
தினமும் உண்டாம் நட்புக்கு

வஞ்சகத்தில் நொந்து போனவர்
வருத்த படுகிறார் வழியின்றி
வல்ல நட்பு இல்லாமையால்

ஒருமை பாட்டு உலகத்தில்
ஒன்று பட்டு இருப்போம்
ஒரு உன்னத நட்புவோடு

துன்பத்தை துளியின்றி துடைத்திடும்
தக்க சமயத்தில் தகர்த்திடும்
தன்னலம் இல்லா நட்பு

மன்மத மாகிபோன உலகில்
மனதில் அகந்தை அழிந்திடும்
நட்பு செவ்வென இருந்தால்

ஒருமுறை அல்ல ஓராயிரமுறை
சொல்லகூடும் உறுதியோடு - உலகம்
அழிந்தாலும் உண்மை நட்பு அழியாது

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved