Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

  கவிதை

அழியாத நினைவலைகள்  

கடந்து போன
காலங்களை
திரும்பிப் பார்க்கிறேன்
கனவாகி போன
என்னை
கவிதையாக்குறேன் ...

மணல் வீடு !
கண்ணாம்பொத்தி விளையாட்டு !
பம்பரம் விளையாட்டு !
கபடி விளையாட்டு !
கட்டைசாமி பக்தி விளையாட்டு !
பட்டம்விட்டு பரந்த விளையாட்டு !
நான் கண்டது
எத்தனையோ விளையாட்டு
இந்த வாழ்க்கையே
ஒரு விளையாட்டு ...

வெகுநேரம்
கிணற்றில் குதித்து
நீச்சலடிப்பது
வேலியோர ஓணானை
துரத்தியடிப்பது ...

ஒட்டான்சில்லி
எடுத்து வந்து
காசு செய்தது
ஓடிப்போன
நாய்க்குட்டியை
தேடியலைந்தது ...

பச்சைக்கிளி
பிடித்து வந்து
கூண்டிலடைத்தது
மீன் பிடிக்கும்
ஏறியிலே
பாம்பு பிடித்தது...

புளின்காய் அடிப்பதற்கு
கல் எரிந்தது
எறிந்தகல்
நன்பனொருவன்
மண்டைபிளந்து ...

விளையாட்டு சண்டையிலே
சட்டை கிழிந்தது
அம்மாவிடம் அடிஇல்லா
திட்டு பெற்றது ...

அரும்பு மீசை வயதினிலே
காதல் வந்தது
அதனாலே எனக்குள்ளே
கவிதை முளைத்தது ...

பள்ளிகூட நோட்டினிலே
கவிதை வரைந்தது
வாத்தியாரின் கண்ணில்பட்டு
அடிபட்டது ...

கல்லூரியில் படிக்க மனம்
ஆசைகொண்டது
வறுமையினால் வந்தத் தொல்லை
என்னை வென்றது ...

வேலைத்தேடி வேலைத்தேடி
விரைந்து போனது
வெட்டிக்கதை பேசிப்பேசி
வெறுத்து போனது ...

வீட்டினிலே சொல்லாமல்
சென்னை வந்தது
நினைத்தவேலை கிடைக்காமல்
மூட்டை சுமந்தது ...

அன்புகளும் அம்பாய்மாறி
நெஞ்சில் தைத்தது - சில
ஆசைகளோ அடிமனதில்
இறந்துபோனது ...

ஏன்பிறந்தோம் என்றுகூட
என்னம் வந்தது
உயர்ந்துவிடும்
என்னம் கொஞ்சம் உள்ளிருந்தது...

கடந்து போன காலங்களை
திரும்பிப்பார்க்கிறேன்
கனவாகிப்போன
என்னை கவிதையாக்கினேன்...!!!

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved