|
குண்டர் சட்ட குற்றவாளிக்குத் தண்டனை தந்த
இலண்டன்
வாழ் தமிழர்களைத் தெண்டனிட்டுப்
பாராட்டுகின்றோம்

பொல்லாப் போர்க்குற்றங்கள் பற்பல புரிந்த
போக்கிரி அரக்கனைப் புத்தர்தான்
பொறுப்பாரோ?
எல்லா வஞ்சகமும் இழைத்த சூனியக்காரியை
இரக்கமுள்ள யேசுதான் ஏற்று மன்னிப்பாரோ?
சொல்லணாச் சூதுக்குத் துணைபோன கருநாகத்தைத்
தூய காந்திதான் கொல்லாமல் கருணை
காட்டுவாரோ?
வல்லான் திருவள்ளுவரின் வாய்மையும்
அறத்தீர்ப்பும்
வானரங்கள் வாலை நறுக்கும் வேளையுந் தான்
வந்ததுவே!
நில்லாப் பனிப்பொழிவில் நிமிர்ந்து நின்ற
இலண்டன்வாழ் தமிழ்
நெஞ்சங்களை
“நியாயமே
நீள் நிலத்தில் எந்நாளும்
வெல்லும் வெல்லும் வெல்லும்”
என்பதனை
விளங்க வைத்தீர் உம்மை வீழ்ந்து
வணங்குகின்றோம்!
(பாவடிவம்)
சத்தியவான்
Home
|