Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

  கவிதை

 

ஆரணங்கின் ஆனந்தத் தாண்டவம்!

 

பேதைப் பெண் என்ற பேர் கொண்டழைத்த

பிதற்று மொழிக்காரர் எல்லாம்

மேதைப் பெண் என்று மேன்மையோடு செப்பிட

மேதினியைச் சிறக்கச் செய்வாயடி!

 

 

கணினி யுகம் தொன்றி கால் நூற்றாண்டு

காலமும் கழியவில்லையடி; அடடா!

கன்னிப் பெண் தன்கால் மிக அழுந்தத் பதித்து

கனவேகத்தில் கறங்காய் சுழல்கிறாளடி!

 

மானோ” “மயிலோ இவள் என்று இயம்பிய

ஏனோ தானோ உவமைகள் எடுபடாதடி!

நானோ அறிவியல் தொழில் நுட்பம் நங்கையின்

பேனா முனையில் பேசி சதிராடுமடி!

 

 

நுண்ணிய ஆடைகள் மேகப் பஞ்சில் பின்னிடும்

நூற்பாலைகள் நூதனமாய் இயக்குவாளடி!

மின்னல் ஒளியில் மின்சார சக்தி எடுக்கும்

மேலான யுக்தியையும் மெல்லியல் அறிவாளடி!

 

கதிரொளியில் காற்றாலை தன்னில் மற்றும்

                கடலலையில் மின்சாரம் கண்டு எடுப்பாளடி!

நதியொடு நங்கைதனை ஒப்பிட நல்ல கவிஞர் மறுப்பாரடி!

                நவயுக புருஷியின் மதிவளம் நயந்து வியப்பாரடி!

 

தொடுவானத்தில் தொழிற்பேட்டைகள் தொடங்கிட

                தோகையவள் துடிப்புடன் எழுவாளடி!

நடுவானத்தில் ஒருவனே தேவனென்று பொது வழிபாடு

                நடத்திட நாரியர் நயந்திடுவாரடி!

 

இந்திரலோகம் என்பதெல்லாம் இனி எந்திர லோகமடி!

                எந்த ஓசையும் கழிவும் இல்லாத

மந்திர ஜால மாயா உலகம் மலருமடி! வாழும்

                மனிதர் எவர்க்கும் வயிற்றுப் பசி இல்லையடி!

 

மண்னிடை வள்ளுவர் மறுபடி வருவார் என்ற

                மாசறு சத்தியம் மனதினில் பூணுவோமடி!

விண்ணரசு விதித்திடும் ஆணையில் தமிழ் ஈழம்

                வெற்றியும் விளங்கிட காணுவோமடி!

 

                 தி.மா.சேஷாசலம்.

                    பொறியாளர்

 


Home

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved