|

வல்லவனுக்கு வல்லவன்
கந்தன் எனும் ஒரு ஓவியன் இருந்தான்.
அவன் திறமையான ஓவியன்தான். ஆயினும்,
தன் திறமை மீது மிகவும் கர்வம்
கொண்டவன். இந்தக் காரணத்தால் அவன் யாரையும் மதிப்பதில்லை. எனவே
அவனுக்கு
நண்பர்களும் மிகவும் குறைவு. அவனிடம்
ஓவியங்கள் வரைந்து வாங்க பல
இடங்களிலிருந்தும் மக்கள் வருவார்கள். அவன்
கேட்ட விலையைக் கொடுத்து
ஓவியங்களை வாங்கிச் செல்வார்கள்.
அதே ஊரிலேயே இன்னொரு ஓவியனும் இருந்தான். அவன்
பெயர் மாறன். மாறனும்
திறமையான ஓவியன். மக்களிடம் பெரிதும் புகழ்பெற்றவன். ஆயினும்
அவன் நல்லவன்.
அன்பும் பணிவும் கொண்டவன். அவனுக்கு ஏராளமான
நண்பர்கள் இருந்தார்கள். கந்தன்
ஒரு நாள் தன் திறமையைக் காட்டி
பெருமைப்பட்டுக் கொள்வதற்காக மாறனை
அழைத்தான். அப்போது அவன் பழங்களின் ஓவியம் ஒன்றை
வரைந்துகொண்டிருந்தான்.
கந்தனின் ஓவியத்தைப் பார்த்த மாறன் மிகவும்
மகிழ்ச்சியடைந்தான். ஏனென்றால்,
அந்த ஓவியம் அவ்வளவு சிறப்பாக வரையப்பட்டிருந்தது. அந்த
ஓவியத்தில் இடம்
பெற்றிருந்த கனிகளும் இலைகளும் அவ்வளவு
தத்ரூபமாக இருந்தன. யார்
பார்த்தாலும் அவற்றை உண்மையான கனிகள் என்றே
நம்பிவிடுவார்கள்.
கந்தனின் திறமையை உணர்ந்துகொண்ட மாறன் அவனை
மனப்பூர்வமாகப் பாராட்டினான்.
பிறகு கந்தன் என்ன செய்தான் தெரியுமா?
அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டுபோய்
தன் வீட்டு வாசலில் வைத்தான். சற்று நேரத்திற்குப் பிறகு அந்த
ஓவியத்தை
நோக்கிப் பறவைகள் வந்தன. சித்திரத்தில் உள்ளவை
உண்மையான பழங்கள் என்று
நினைத்து கொத்தித் தின்ன முயன்றன. ஆனால்
ஓவியம் பலகையில்
வரையப்பட்டிருந்ததால்,
அலகில் அடிபட்டுக் கீழே விழுந்தன. மேலும் பறவைகள்
வந்து கொத்திப் பார்த்து ஏமாந்தன.
அதே ஊரிலேயே இன்னொரு ஓவியனும் இருந்தான். அவன்
பெயர் மாறன். மாறனும்
திறமையான ஓவியன். மக்களிடம் பெரிதும் புகழ்பெற்றவன். ஆயினும்
அவன் நல்லவன்.
அன்பும் பணிவும் கொண்டவன். அவனுக்கு ஏராளமான
நண்பர்கள் இருந்தார்கள். கந்தன்
ஒரு நாள் தன் திறமையைக் காட்டி
பெருமைப்பட்டுக் கொள்வதற்காக மாறனை
அழைத்தான். அப்போது அவன் பழங்களின் ஓவியம் ஒன்றை
வரைந்துகொண்டிருந்தான்.
கந்தனின் செயலைப் பார்த்து மிகவும்
வருத்தமுற்றான் மாறன். கந்தன் தன்
திறமையால் பரிதாபத்திற்குரிய பறவைகளை ஏமாற்றியது அவனுக்குச்
சற்றும்
பிடிக்கவில்லை. எனவே,
அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று
நினைத்தான். அவன் சொன்னான்,""கந்தன்,
உங்கள் திறமையைக் கண்டு பெரிதும்
மகிழ்கிறேன். உங்களுக்கு விருந்தளித்து கெüரவிக்க வேண்டும் என்று
நினைக்கிறேன். நீங்கள் அவசியம் வரவேண்டும்.''
கந்தன்,
மாறனின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றான். அவனை அன்புடன்
வரவேற்று உபசரித்தான் மாறன். உணவு உண்ண அழைத்தான். விருந்து
மேசையில்
பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டிருந்தன.
அத்தனையும் அற்புத சுவையுடைய
உணவு வகைகள். பார்க்கப் பார்க்கப் பசி பெருகியது கந்தனுக்கு.
நாவில் நீர்
ஊறியது. அவன் ஆவலுடன் அந்த உணவு மேசையருகே
அமர்ந்தான். உண்ண முற்பட்டான்.
மேசையிலிருந்த உணவுப் பொருட்களை எடுத்து உண்ண
முயன்ற கந்தன் பெருத்த
அதிர்ச்சியடைந்தான். மேசையில் பரிமாறப்பட்டிருக்கும் உணவுகள்
உண்மையானவையல்ல. அவை மேசை மீது வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு
பருக்கையுமே
நிஜம்போலவே இருந்தன. ஓவியம் என்று நினைத்துப்
பார்க்க முடியாதபடி அந்தளவு
துல்லியமாக இருந்தன அவை. கந்தன் உறைந்துபோய்
அமர்ந்திருந்தான்.
அப்போது சொன்னான் மாறன்,""நீங்கள்
உங்கள் திறமையால் அந்தப் பறவைகளை
ஏமாற்றினீர்கள் அல்லவா,
அதனால்தான் நான் இப்படிச் செய்தேன். திறமையும்
அறிவும் மிக்கவர்கள் அன்புடனும் பணிவுடனும் இருக்கவேண்டும்.
ஆணவம் கொண்டால்
அழிவது உறுதி. நம் திறமையைக் கொண்டு நாம்
நல்லதுதான் செய்ய வேண்டுமே தவிர
தீங்கு செய்யக் கூடாது.''
கந்தன் திருந்திய மனிதனாக அங்கிருந்து
வெளியேறினான்.
|