|

தீ பந்தமும்,
முட்டாள் திருடர்களும்.
ஒரு
ஊரிலே 4
திருடர்கள் இருந்தார்கள்.
அவர்கள் நால்வரும் புத்திசாலிகள்
இல்லை.
அதனால் அவ்வூர் மக்கள் அவர்களுக்கு பல
புத்திகள் சொல்லியும்
திருடுவதை கைவிடவில்லை. இதனால் அவர்களுக்கு
"முட்டாள் திருடர்கள்" என்று
பெயர் சூட்டினார்கள்.
இவர்களால் அவ்வூர் மக்கள் வேதனை அடைந்ததோடு,
பயப்பிடவும் செய்தார்கள். இந்த முட்டாள்
திருடர்களினால் தமக்கு ஆபத்தும்
ஏற்படலாம் என்று ஐயப்பட்டார்கள்.(
ஐயம்---பயம்)
இவர்கள் கவலையைக்
கேள்விப்பட்ட அடுத்த ஊரில் வசிக்கும்
ஒரு இளைஞன்
அந்த 4
திருடர்களுக்கும்
புத்தி புகட்டவேண்டும் என்று யோசித்து ஒரு
முடிவுக்கு வந்தான்.
அதன் படி
ஒரு நாள் இரவு அவர்கள் பதுங்கியிருக்கும்
இடத்திற்கு அந்த இளைஞனும்
சென்று,
அவர்களோடு தானும் திருட வருவதாகச் சொன்னான்.
இந்த
முட்டாள் திருடர்களும் தங்களுக்கு ஒரு ஆள் கூடுதலாக
வந்திருப்பதையிட்டு
மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள். தங்களால்
நிறைய பொருட்களை களவாடலாம்
என்று மிக்ககுதூகலமாக இருந்தார்கள்.
ஒரு வீட்டில் சில பொருட்களை
களவாடினார்கள்.
அதன் பின்பு அவற்றை
எடுத்துக்கொண்டு செல்ல
முற்படும்போது
,
அந்த இளைஞன் கூறினான்.." ஐயா பெரியவர்களே
இந்தப்பொருட்களின் பெருமதி மிக அதிகம் இதனை எங்கள் ஊரில்
விற்றால் அதிக
லாபம் கிடைக்கும்.
ஆகவே வாருங்கள் ஆற்றைக்கடந்து
எங்கள் ஊருக்குப்
போவோம்" என்று.
இதனை
4
திருடர்களும் சரி என்று தலையாட்டி
ஆமோதித்தார்கள்.
அடுத்தஊருக்கு செல்லுகையில் அந்த ஆற்றை
கடக்கவேண்டிதாயிற்று.
அதனை கடக்க இவர்கள் நால்வரும் தயங்கினார்கள்.
இதுதான் தருணம் என்று ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ஒரு தீ
பந்தத்தை
கொளுத்தி
ஒருவரிடம் கொடுத்து "ஐயா இதனை கொண்டே அந்த ஆற்றில்
வைத்துப்பாருங்கள்.
அப்போது எனக்கு தெரியும் ஆறு கோபத்தில்
இருந்தால் தீ
அணைந்துவிடும்.
சந்தோசத்தில் இருந்தால் அணையாது."
அப்போது
ஒருவர் கேட்டார், "ஆறு
கோபத்தில் இருந்தால் நாங்கள் என்ன செய்வது..?
"
அதற்கு அந்த இளைஞன்
சொன்னான்.
"ஐயையோ
ஆற்றுகக்கு கோபம் வந்தால் இங்கே
சுனாமி வரும். சுனாமி வந்தால்,
ஆற்றின் பெரிய நாக்கு வந்து எங்களை எல்லாம்
சுருட்டி தன் வயிற்றுக்குள் போட்டு விடும்.
விடாமல் துரத்தும். நாங்க
வேற அடுத்தவர் பொருட்களை அல்லவா திருடிக்கொண்டு
வந்துள்ளோம்.. "என்று
கூறினான்.
இதனை பயத்தில் கேட்ட அந்த பெரியவர்
தீ பந்தத்தை ஆற்றிலே
எட்ட நின்று வைத்தார்.. அது சுர்ர்ர்....என்ற சத்தம் கேட்டு
அணைந்து விடவே
"ஐயோ......நான் திருட மாட்டேன் திருடமாட்டேன்" என்று
எடுத்தாராம் ஓட்டம்.
அவரைத் தொடர்ந்து மற்ற மூவரும் "தப்பித்தோம்
களவுசெய்யமாட்டோம்.
கடவுளே எங்களைக் காப்பாற்று" என்று ஓடி,
அன்றிலிருந்து திருடுவதை
விட்டுவிட்டார்களாம் அந்த முட்டாள் திருடர்கள்.
|