|

தேவலோகத்து மாலை
வெகு
காலத்திற்கு முன்,
வளசபுரி என்ற நாட்டை சதுர்வேதி என்ற மன்னன்
ஆண்டு
வந்தான். அவன் ஒவ்வொரு ஆண்டும்,
தன் தலைநகரில் பிரமாண்டமான விழா எடுப்பது
வழக்கம். பல நாட்கள் நடைபெறும் இவ்விழாவில்,
வேற்று நாட்டு மன்னர்களும்,
மக்களும் கலந்து கொள்வர். கடைகளும்,
கேளிக்கைகளும்,
நகரத்துக்குப் புது
மெருகூட்டும். வீடுகள் அலங்காரத்துடன்
காட்சியளிக்கும். வண்ண வண்ணக்
கோலங்கள் வாசலில் மிளிரும். மக்களின்
உள்ளத்தில் உவகை;
உடலில் புத்தாடை;
நகரே சொர்க்கலோகமாய்க் காட்சியளிக்கும்.
விழா நாளை,
ஆடவரும்,
பெண்டிரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டிருப்பர். தேவர்களும்கூட மனித உருவில்
விழாக்கோலம் காண வருவது வழக்கம்.
அப்படித்தான்
அந்த ஆண்டில் நான்கு தேவகுமாரர்கள் விழாவைக்
கண்டுகளிக்க வந்திருந்தனர்.
அவர்கள் அணிந்திருந்த தேவலோகத்து மலர்
மாலைகளின் வாசனை அந்த நாட்டையே
மயக்கியது.
அவர்கள் தேவகுமாரர்கள் என்று,
விரைவில் மக்கள் தெரிந்துகொண்டனர். அவர்களைச்
சுற்றிக் கூட ஆரம்பித்தனர்.
பலர்,
தங்களுக்கு அந்த மாலைகள் வேண்டுமென்றனர்.
அரசன்,
இளவரசர்களையும்,
ராஜகுருவையும் கூட அந்த ஆசை ஆட்டிப்படைத்தது.
அந்த மாலையைச் சிறிது நேரம்
அணிந்திருப்பது தங்கள் பாக்கியம் என்று
கருதினர்.
''இம்மாலை
தேவலோகத்து
மாலை... வாடாது மணம் பரப்பும். இம்மாலையை
அணிவதற்கு உங்களுக்கென்று சில
தனித் தகுதிகள் வேண்டும். தீய செயல்,
தீய சிந்தனை,
தீய இயல்பு கொண்டவர்கள்
இம்மாலையை அணியத் தகுதியற்றவர்கள். இப்போது
சொல்லுங்கள்,
உங்களில் யாருக்கு
இத்தகுதிகள் இருக்கின்றன?
நீங்களே சுயசோதனை செய்து கொள்ளுங்கள்!''
என்று
நான்கு தேவகுமாரர்களில் ஒருவர் கூறினார்.
அந்தக் கூட்டத்தில்,
எந்த
மனிதக் குரலும்,
அந்த மலர் மாலையைக் கேட்கவில்லை. ஆனால்,
ஒரேயொரு மனிதக்
குரல் அந்த மாலையைக் கேட்டது. அதுதான்
ராஜகுருவின் குரல்.
''உண்மையில்
உங்களை சுயசோதனை செய்து கொண்டீர்களா?''
'எந்தத்
தீய இயல்பும் என்னிடம் இல்லை. இதை
அணிந்துகொள்ள நானே முற்றிலும் தகுதியானவன்!''
பொய்யும்,
புரட்டும்,
உருட்டும்,
திருட்டும் நிறைந்த ராஜகுரு,
தன் இயல்புகளை
மறைத்துக்கொண்டு கேட்டார். தன் மலர் மாலையைக்
கழற்றி,
முதல் தேவகுமாரன்
அவர் கழுத்தில் போட்டார்.
இப்போது இரண்டாவது தேவகுமாரன் பேசினார்.
''என்
மலர் மாலையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள்
யார் தெரியுமா?
திடமான
அறிவும்,
மனமும் கொண்டு தினமும் நற்காரியங்களில்
ஈடுபடுவோர்,
இம்மலர்
மாலையை அணிந்துகொள்ளலாம்.''
கூட்டத்தில் எந்தக் குரலும் ஒலிக்கவில்லை.
ராஜகுருவின் குரல் மட்டுமே ஒலித்தது. மலர்
மாலை அவர் கழுத்தில் விழுந்தது.
இப்போது மூன்றாவது தேவகுமாரன்,
தன் மலர் மாலையைப் பெறத் தகுதியானவர் யாரென்று
கூறினார்.
''அறநெறிகளில்
செல்வம் சேர்த்தவர்,
போகப் பொருட்களுக்கு அடிமையாகாதவர்கள்,
தானென்ற
செருக்கு இல்லாதவர்கள் இம்மலர் மாலையைப்
பெற்றுக்கொள்ளலாம்,''
என்றுரைத்தார்.
தானென்ற அகந்தையும்,
தற்பெருமையும்மிக்க ராஜகுரு,
பிறர்
உரிமை கொண்டாடுவதற்கு முன்,
''எனக்கே
இத்தகுதியும் இருக்கிறது,''
என்றார்.
மூன்றாவது மாலையும் அவர் கழுத்தில் விழுந்தது.
''புறம்பேசித்
திரியாதவர்,
பிறரைச் சொல்லாலும்,
மனதாலும் நிந்திக்காதவர்,
பண்போடு
வாழ்பவருக்கே என் மாலை சொந்தம்,''
என்ற நான்காவது தேவகுமாரனின் விதிகளையும்
ஏற்று அம்மாலையையும் பெற்றுக்கொண்டார்.
''ஆகா,
இத்தனை இயல்புகளும்
கொண்ட நல்ல மனிதர்,
நம்மிடையே இருக்கிறாரே! நல்ல மனிதர் வாழ்க!
வாழ்க!''
என்று கூடியிருந்த மக்கள் கோஷமிட்டனர்.
தேவகுமாரர்கள் தேவலோகத்துக்குச்
சென்றுவிட்டனர்.
|