நெஞ்சார நேசிப்போம்
ஒரு துறவி,
அவரிடம் வாழ்க்கை
பற்றிய தெளிவை பெற இரண்டு
இளைஞர்கள் வந்தனர். அப்போது துறவி,
""என்னிடம்
போதனை பெறுவதற்கு முன் உங்கள்
இருவருக்கும் சோதனை வைக்கிறேன். சம்மதமா?''
என்றார்.
இருவரும் ""சம்மதம்!''
என்றனர்.
""ஆளுக்கு
ஒரு விதை தருகிறேன். அதை செடி ஆக்கி ஆறு
மாதங்களுக்கு பின் பூக்கும் பூக்களை என்னிடம்
எடுத்து வாருங்கள்!''
என்றார் துறவி.
ஆறு மாதங்கள் உருண்டோடின.
இளைஞர்கள் இருவரும் துறவியிடம் திரும்பி
வந்தனர். ஒரு சீடன் கையில் இரண்டே இரண்டு
பூக்கள் மட்டுமே இருந்தன.
""இந்த
இரண்டு பூக்கள் மட்டும்தானா?''
என்று கேட்டார் துறவி.
""ஆம்
குருவே... நீங்கள் கொடுத்த விதையை பார்த்தேன்.
பார்த்தபோதே பழுதானது
போல தெரிந்தது. பயிர் செய்த
மண்ணும் சரியில்லை. அதனால்,
இந்த இரண்டு
பூக்கள் மட்டும்தான் பூத்தன!''
என்றான் விரக்தியோடு.
அடுத்த இளைஞனை திரும்பிப்
பார்த்தார் துறவி. அவன் கையில் நிறைய பூக்கள்
இருந்தன. ""உன்னிடம் மட்டும்
எப்படி இவ்வளவு பூக்கள்?''
என்றார்.
""குருவே!
நீங்கள் கொடுத்த விதையை நான் நெஞ்சார
நேசித்தேன். மண்ணை மனதார
மதித்து போற்றினேன். தண்ணீர்
ஊற்றும்போது அன்பையும் கலந்து ஊற்றினேன்.
மகிழ்ச்சி அடைந்த செடி எனக்கு
ஏராளமான பூக்களை பரிசாக கொடுத்து மகிழ்ந்தது,
மகிழ்வித்தது!''
என்றான்.
துறவி அந்த இளைஞர்கள்
இருவரையும் அருகில் அழைத்து சொன்னார்.
""உயிருள்ள,
உயிரற்ற அனைத்தையும்
நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். இதுவே
உங்களுக்கு நான் தரும்
வாழ்க்கைப் பாடம்!''
என்றார் துறவி. ஒவ்வொரு
உயிரியையும் நேசிப்போம்!
ஒவ்வொரு பொருளையும் நேசிப்போம்!
|