Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

             முயற்சி

 

செல்வி நன்றாகப் படிப்பாள். மற்ற விஷயங்களிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். ஆனால் அவள் நினைத்ததுபோல அவளால் எல்லாவற்றிலும் வெற்றியடைய முடியவில்லை. நம்மால் அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்று அவளுக்கு வருத்தம். இதனால் தொடர்ந்து முயற்சி செய்வதிலேயே அவள் நம்பிக்கை இழந்துவிட்டாள். ஒரு நாள் செல்வியின் அம்மா அவளை அருகே அழைத்தார்கள். தன் கையில் இருந்த பழத்தைக் காட்டிக் கேட்டார்கள்:

""
என் கையில் இருப்பது என்ன?''

""
இது ஒரு பழம் அம்மா! இதுகூடவா எனக்குத் தெரியாது?''

அம்மா, பழத்தை இரண்டாகப் பிளந்து காட்டிக் கேட்டார்கள்: ""இப்போது நீ இந்தப் பழத்திற்குள் என்ன பார்க்கிறாய்? ''

""
பழத்திற்குள் நிறைய விதைகள் இருக்கின்றன, அம்மா''

""
இந்த விதைகள் அனைத்தையும் விதைத்தால் எத்தனை மரங்கள் வளரும்?''

இப்போது செல்வி சற்று யோசித்துவிட்டுச் சொன்னாள்:

""
விதைகள் எல்லாவற்றிலிருந்தும் மரம் வருமா என்பது சந்தேகம்தான் அம்மா...''

""
இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது?''

என்ன இருந்தாலும் செல்வி புத்திசாலிப் பெண் அல்லவா! அம்மா எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள் என்று அவளுக்குப் பட்டென்று புரிந்துவிட்டது. அவள் சொன்னாள்:

""
நாம் முயற்சிக்கும் எல்லாமே வெற்றி பெறும் என்று நினைப்பது தவறுதான் அம்மா!''

""
நீ முயற்சி என்ற விதைகளை விதைத்துக்கொண்டே இரு. நிச்சயம் ஒரு நாள் ஏதாவது ஒரு விதையிலிருந்து வெற்றி எனும் கனி கிடைக்கும். முயற்சிகள் தோல்வியடைவது குறித்து மனம் கலங்காதே. முயற்சிக்காமல் சும்மா இருப்பதைவிட, முயற்சி செய்வதே மேலானது.''

செல்வி நம்பிக்கையுடன் சிரித்தாள்

 

 

 


Home

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved