Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

 

.முயலும் ஆமையும்.

 

தம்பி தங்கைகளுக்கு அக்கா ஒரு கதை சொல்லப்போகிறேன்...
"
முயலும் ஆமையும் " என்ற கதை. அட இது பழைய புராணம்தானே என்று படிக்காம போயிடாதீங்க....படியுங்க....

இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னேற்பாடாக மைதானம் விழாக்கோலமாக காட்சி தந்தது. வருடாவருடம் நடைபெறும் ஆமை அண்ணாவிற்கும், முயல் அண்ணாவிற்கும் ஓட்டப் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்த ஒழுங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன....

இதனைக் கண்டுகளிக்கவென்று வீட்டு மிருங்கங்களும், காட்டு மிருங்களும் ஒற்றுமையாக கைகோர்த்துக்கொண்டு மைதானத்திற்கு வருகை தந்த வண்ணமே இருந்தார்கள். வழமைபோல நம்ம ஆமை அண்ணா தான் இம்முறையும் ஜெயிப்பார் என்று நரி மாமா சொல்லவும், இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஓநாய் மாமா சட்டென்று தலையைத் திருப்பி ஹா..ஹா..என சிரித்துக்கொண்டு...

இதென்ன கதை......விழுந்தவன் மீண்டும் எழும்பிறதில்லையோ.......இந்த முறை பாருங்கோ நம்ம தம்பி முயல் நல்ல உசாராகயிருக்கிறார்.
ஆகவே நிட்சயம் அவருக்குத்தான் வெற்றி.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு.

அட இந்த விஞ்ஞானம் பேசும் காலத்தில், சொல்லஏலாது முயல் தம்பி நிற்கிற ஸ்டைலைப் பார்க்கும் போது அவர்தான் ஓட்டப்போட்டியில் வெற்றி பெறுவார் போலயிருக்கு..எதற்கும் ஒரு பந்தயம் கட்டுவோமென வயதில் முதிர்ந்த நரி சொல்லிக்கொண்டே பணம் வசூலிக்கத் தொடங்கியது. மைதானம் நிரம்பிய கூட்டம். கைதட்டல்கள் ஏராளம்......சேவல் உயரத்தே நின்று கொக்கரக்கோ என ஒலி எழுப்ப போட்டி ஆரம்பமானது. இன்னும் மூன்று முறை அதன் ஒலிக்காக காத்துக்கொண்டு காதைத்தீட்டியபடி இருந்த முயலிடம்......

மெல்ல நடந்து ஆமை நேரே முயலிடம் சென்றது. நண்பா பார்த்தாயா.....நாம் இருவரும் எப்ப போட்டிபோட்டுக்கொள்வோம், இதில் யார் ஜெயிப்பது என்ற எண்ணத்திலே இங்கேயிருக்கின்ற சக உறவுகள் வேடிக்கை பார்க்கின்றன. நமக்கு இது தேவைதானா. நம்ம முதியோர்கள் ஆரம்பிச்சு வச்சாங்க....அது ஏதோ ஒரு பாடமாக இருக்கட்டும்.

இப்ப நாம இருவரும் மனசு வைத்தால், வெற்றியும் தோல்வியும் எமக்கே.நாங்கள் நண்பர்கள். என்று கூறுவோம். எத்தனை வருடங்களுக்குத்தான் இப்படியே போட்டிபோடுவது. நாம நடக்கிற நடையில் ஏனையவர்கள் தலைகுனிய வேண்டும். எங்களைச்சாட்டி தாங்கள் வேடிக்கை பார்க்கவும், பந்தயம் கட்டவும் ஆளாளுக்கு வீண் பொறாமையை வளர்க்கவும் மட்டுமே இந்த விளையாட்டாகிறது. அதனால நாம் இருவரும் ஒருவரே என்று கூறினால் தலையைக் கவிழ்த்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.

நல்லது ஆமை அண்ணா. உண்மைதான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு இன்னும் நம்மை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும், நம் உறவுகளுக்கு நமது ஒற்றுமை ஒரு பாடமாக அமையட்டும்.

இங்கே கூடியிருக்கும் உறவுகளுக்கு நாங்கள் இருவருமாகச் சேர்ந்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம்.

இன்னும் பழைய நினைப்பில் வாழாமல், நம்மால் எது செய்தால் நன்மை தரும் என்றதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ்வதே சிறந்த வாழ்க்கைக்கு வழியாகும்.

ஆமையும் முயலும் என்றும் போல் ஒரு தோட்டத்தில் உலா வரும் நண்பர்கள்.

வருகைக்கு நன்றிகள் கூறி பார்வையாளர்களிடமிருந்து விடைபெறுகிறோம்.

ஏமாற்றமடைந்த ஏனைய மிருகங்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றன.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved