Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

 

மன்னரும் குயவரும்...

 

வங்க நாட்டின் தலைநகரான பிரம்ம தேசத்தில் குப்புசாமி என்பவன் குயத்தொழில் செய்து வந்தான். ஒரு நாள் அவன் வசித்து வரும் தெரு வழியாக இளவரசன் சித்ரசேனனும் படை வீரர்களும் குதிரையில் வேகமாகச் சென்றனர். குதிரையின் கால்பட்டு தெரு ஓரங்களில் வைத்திருந்த மண்பாண்டங்களும் சூளையிட்ட வெந்த மண்பாண்டங்களும் நொறுங்கின.

வீட்டினுள்ளிருந்து ஓடி வந்த குப்புசாமி "இளவரசே! இளவரசே!' என்று குரல் கொடுக்க திரும்பிப் பாராமல் குதிரையில் வேகமாகச் சென்றான் சித்ரசேனன். செய்து வைத்த பானை, சட்டியெல்லாம் உடைந்ததைக் கண்டு துடித்தான் குப்புசாமி. மனம் பதறினான்.

இதை இப்படியே விடக் கூடாது என நினைத்த குப்புசாமி, மறுநாள் அரச சபைக்குச் சென்று மன்னன் மது சூதனனிடம் இளவரசன் சித்ரசேனன் தனது மண்பாண்டங்களை உடைத்து விட்டு வந்ததைப் பற்றி முறையிட்டான்.

மன்னன் மதுசூதனனோ, ""குப்புசாமி நீ சாலை ஓரங்களில் மண்பாண்டங்களை வைத்திருந்தது உன் தவறுதான். இருந்தாலும் நீ என்னிடம் வந்து முறையிட்ட காரணத்தால், மந்திரியாரே குப்புசாமியை நமது கஜானாவிற்கு அழைத்துச் சென்று முறைப்படி தங்க நாணயங்களை நஷ்ட ஈடாகக் கொடுத்து அனுப்பி வை'' என்றார்.

""
அப்படியே ஆகட்டும் மன்னா!'' என்ற மந்திரி காளிங்கராயன் குப்புசாமியை கஜானா இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

""
குப்புசாமி இதோ பார் அறை முழுவதும் தங்க நாணயங்கள். இதை நாங்கள் அப்படியே எடுத்துக் கொடுப்பதில்லை. அதோ பார் ஒரு பெரிய இரும்புக் குண்டு. அந்தக் குண்டை நீ தூக்க வேண்டும். பின்னர் அந்தக் குண்டை எடை தராசில் வைக்க வேண்டும். அந்தக் குண்டு எடைக்கு தங்கக் காசுகளை உனக்குத் தருவேன் போய்த் தூக்கு'' எனக் கூறி சிரித்தார் மன்னர் காளிங்கராயன். இரும்புக் குண்டு முழுவதும் எண்ணை தடவப்பட்டு வழ வழ என்றிருந்தது.

""
அடப்பாவிகளா! குண்டே பெரியது இதில் எண்ணை வேறு தடவி வைத்திருக்கிறீர்களா. இப்படியுமா ஏழைகளை ஏமாற்றி மோசம் செய்வீர்கள். எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போது பேசிக் கொள்கிறேன்'' என்று கோபத்துடன் வெளியேறினான் குப்புசாமி. பின்னால் நின்றிருந்த மந்திரி, வீரர்கள் சிரித்தனர்.

""
ஒரு நாள் மன்னா நமது அரண்மனையில் உள்ள அம்மன் கோயிலில் நூற்று எட்டு பானைகள் வைத்து பொங்கலிட வேண்டும்'' என்றார் மகாராணி மங்கையர்கரசி.

""
என்ன மங்கை திடீரென்று சொன்னால் எப்படி?'' என்றார் மன்னர் மதுசூதனன்.

""
அதெல்லாம் எனக்குத் தெரியாது. உடனே பூஜைக்கு பானைகள் வேண்டும்'' என்றார் மங்கையர்கரசி.

உடனே வீரர்களை குயத்தெருவிற்கு அனுப்பினார் மதுசூதனன். சென்ற வீரர்கள் வெறுங்கையோடு திரும்பி வந்தனர்.

""
என்ன பானைகள் வாங்கி வரவில்லையா?'' என்றார் மதுசூதனன்.

""
மன்னா பானைகள் குயவன் குப்புசாமியிடம் தான் இருக்கிறது. ஆனால், தாங்களும், மந்திரியாரும் வராமல் கொடுக்க முடியாது'' என்றான்.

""
மந்திரியாரே! இப்போது என்ன செய்வது?'' என்றார் மதுசூதனன்.

""
மன்னா பானைகள் வராவிட்டால் பொங்கலிட முடியாது, தெய்வ குத்தமாகி விடும். மேலும், மகாராணியிடம் பதில் சொல்ல முடியாது. நாமே நேரில் செல்வோம்'' என்றார் மந்திரி.

குப்புசாமியின் வீட்டின் முன் சென்று குதிரையில் இருந்து இறங்கினர் மதுசூதனனும், காளிங்கராயனும். குப்புசாமி நிமிரிந்து பார்க்காமல் சட்டி பானை செய்வதில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தான்.

காளிங்கராயன், ""குப்புசாமி மன்னர் வந்திருக்கிறார்'' என்றார். குப்புசாமி மன்னனைப் பார்த்து, ""வணக்கம் மன்னா!'' என்றபடியே வேலையல் மூழ்கினான்.

""
குப்புசாமி மகாராணியாருக்கு பொங்கல் பூஜை செய்ய நூற்று எட்டு பானைகள் தேவைப்படுகின்றன. அதற்கான பொற்காசுகளை வாங்கிக் கொண்டு பானைகளை வீரர்களிடம் ஒப்படை'' என்றார் மன்னர்.

""
மன்னா! எனக்கு ஒரு பொற்காசு கூட வேண்டாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை'' என்றான் குப்புசாமி.

என்ன என்றனர் காளிங்கராயனும், மதுசூதனனும் ஒரே குரலில்.

""
மந்திரியார் களிமண் சேறு மிதித்து கொடுக்க அதில் ஒரே ஒரு சட்டிப் பானை மன்னர் கையால் செய்ய வேண்டும். அப்படி செய்து விட்டால் நூற்று எட்டு இல்லை ஆயிரத்தெட்டு பானை இலவசமாக தருகிறேன்'' என்றான்.

பக்கத்திலே வேறொரு சக்கரத்தில் குப்புசாமியின் பத்து வயது மகன் சட்டிப் பானை செய்து கொண்டிருப்பதை பார்த்தார் மன்னர்.

இந்த சிறுவன் சட்டிப் பானை செய்யும் போது என்னால் செய்ய முடியாதா? என நினைத்த மன்னர், ""காளிங்கராயா நீ சேறு மிதி'' என கட்டளையிட மந்திரி சேற்றில் இறங்கி மிதிக்க, மன்னர் களிமண் உருண்டையை சக்கரத்தின் நடுவில் வைத்து சுற்ற தொடங்க சட்டிப் பானை உருவாகவில்லை. மாறாக, மன்னர், மந்திரியின் உடல் முழுவதும் சேறானது தான் மிச்சம்.

""
ஒரு சட்டிப் பானை செய்வதில் இவ்வளவு கஷ்டமா? அன்றைக்கு சட்டிப் பானையை தன் மகன் நொறுக்கிய போது குப்புசாமி மனம் எப்படி சங்கடப்பட்டிருக்கும். நானும் அவனை கேவலப்படுத்தி ஏமாற்றி விட்டேனே!'' என தன் தவறை உணர்ந்தார் மன்னர்.

""
தொழிலில் எல்லா தொழிலுமே சமம் தான் என புரிந்து கொண்டேன். எனவே, என்னை மன்னித்து விடு'' என்று குப்புசாமியைப் பார்த்து கைக் கூப்பினார் மன்னர்.

""
மன்னா! நீங்கள் திருந்தியதே போதும். உங்களது பூஜைக்கு நான் சட்டிப் பானைகளை என் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறேன்'' எனக் கூறி இரு கை கூப்பி வழியனுப்பி வைத்தான் குப்புசாமி.

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved