Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

கடமை

 

முல்லைவனம் ஓர் அழகிய சிற்றூர். அங்கே செல்வி எனும் சிறுமி வசித்துவந்தாள். அவளுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. அவளுக்குப் பள்ளி செல்லப் பிடிக்கவில்லை. பாடங்களைப் படிக்கப் பிடிக்கவில்லை. வீட்டு வேலைகளைச் செய்யப் பிடிக்கவில்லை. இதெல்லாம் அவளுக்குக் கஷ்டமான காரியங்களாக இருந்தன. "என்ன இந்த வாழ்க்கை இப்படிக் கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கிறதே' என்று நினைத்து வருந்தினாள்.

"
மரம், செடி, கொடிகள், பறவைகள் எல்லாம் எவ்வளவு நிம்மதியாக இருக்கின்றன! நானும் ஒரு மரமாகவோ, அல்லது பறவையாகவோ இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!' என்றுகூட நினைத்தாள் அவள்.

ஒரு நாள் அவள் வேண்டாவெறுப்பாகப் பள்ளி சென்று வந்த பிறகு தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் அமர்ந்தாள். அப்போதும் வழக்கம்போல, "எனக்கு மட்டும் வாழ்க்கை துன்பமாக இருக்கிறதே!' என்று நினைத்தாள்.

அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மரங்கள் அவளை நோக்கி நகர்ந்து வந்தன. ""எங்கள் அன்பான செல்வியே, நீ ஏன் சோகமாக இருக்கிறாய்? உன் கவலைகளை எங்களிடம் பகிர்ந்துகொண்டால் உனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அல்லவா?''

"
என்ன இது நம்ப முடியாத அதிசயமாக இருக்கிறதே!' என்று முதலில் செல்வி திகைப்படைந்தாலும் பிறகு சமாளித்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்:

""
மரங்களே, எனக்கு வாழவே பிடிக்கவில்லை! நான் என்ன செய்வேன்? எப்போதும் படிக்க வேண்டும். எப்போதும் தேர்வு எழுத வேண்டும். சரியாகப் படிக்கவில்லை என்றாலோ, தேர்வில் தோற்றுப்போனாலோ வீட்டில் திட்டுகிறார்கள். வகுப்பிலும் ஆசிரியர் திட்டுகிறார்! உங்களைப்போல மரமாக இருந்தால் பூ பூத்துக்கொண்டும், காய் காய்த்துக்கொண்டும் ஜாலியாக இருக்கலாமே என்று நினைக்கத் தோன்றுகிறது!''

அதைக் கேட்ட மரங்கள் கை தட்டிச் சிரித்தன. ""எங்களைப் பார்த்தா நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று சொல்கிறாய்! நாங்கள் வளர்வதற்கு எவ்வளவு பாடுபடுகிறோம் என்று தெரியுமா? நாங்கள் செடிகளாக இருக்கும்போது ஆடு மாடுகள் வந்து தின்றுவிடும். இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் யாராவது வந்து வெட்டுவார்கள். போன வருடம் அடைமழை பெய்தபோது, இரண்டு பெரிய மரங்களே விழுந்தது உனக்குத் தெரியாதா? சென்ற மாதம் இடிதாக்கி பக்கத்து மரம் கருகிப்போனதை நீயும் பார்த்தாய்தானே! நாங்கள் செடியாக இருந்தாலும் சரி, வளர்ந்து பெரிய மரமாக ஆனாலும் சரி, எங்கள் வாழ்க்கைக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை! இந்த உலகில் எங்கள் இனம் அழிந்து வருகிறது!''

அப்போது இன்னொரு மரம் சொன்னது: ""ஆயினும் நாங்கள் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு எப்போதும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்! நாங்கள் நிழல் தருகிறோம். காய்கனிகள் தருகிறோம். தேவைப்பட்டு வெட்டுபவர்களுக்கு எங்களையே, எந்த எதிர்ப்புமின்றி மனப்பூர்வமாக வழங்குகிறோம்! எங்களால் முடிந்தஅளவு இந்த மனிதர்களுக்கு உதவியாக இருக்கிறோம்! ''

பிறகு மரக் கிளையின் மீது அமர்ந்திருந்த காகம் சொன்னது:""நாங்களும் இப்படித்தான் வாழ்கிறோம். நாங்கள் இடும் முட்டைகளுக்குப் பாதுகாப்பில்லை. பலத்த காற்றடித்தால் அவை கூட்டோடு விழுந்துவிடும். சிறிய குஞ்சுகளைக் கூட்டில் விட்டுவிட்டுச் சென்றால் கழுகுபோன்ற பெரிய பறவைகள் வந்து கொத்தும். சிறுவர்களும் எங்களைக் கல்லால் அடிப்பது உண்டு. மழைக் காலத்தில் நாங்கள் அனுபவிக்கும் துன்பம் பெரிது! ஆண்டுதோறும் நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டுதான் வருகிறோம். எங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்கள் இருந்தாலும்

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved