Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

முன் பக்கம்  |  கதை  |  கவிதை கட்டுரைகள்   நகைச்சுவை சுவைத்தவை நீதி நூல்கள் காப்பியங்கள் எட்டுத்தொகை   பத்துப்பாட்டு  

 கதை

 

வெள்ளை யானையும் வேட்டைக்காரனும்

 

ஒரு சமயம் ஒரு வேட்டைக்காரன் காட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டான். வழி தெரியாமல் அவன் அலைந்து திரியத் தொடங்கினான்.

ஒரு பாறையை நெருங்கியபோது திடீரென்று ஒரு வெள்ளை யானை தென்பட்டது. முற்றிலும் வெள்ளை நிறமாக இருந்தது அந்த யானை.

யானையைப் பார்த்ததும் வேட்டைக்காரன் பயந்து நடுங்கினான். ஆனால், யானை மென்மையாகச் சொன்னது, ""அஞ்ச வேண்டாம், அண்ணே. அஞ்ச வேண்டாம்...''

""
என்ன இது, யானை பேசுகிறதே!'' என்று திகைத்துப்போனான் வேட்டைக்காரன்.

""
வியப்படைவதற்கு ஒன்றுமில்லை அண்ணே. நான் யானைதான். வெள்ளை யானை.''

""
என்ன, வெள்ளை யானையா!''

""
அது இருக்கட்டும். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?''

""
வேட்டையாடுவதற்காக வந்தேன். மிருகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வழி தெரியாமல் நடந்து நடந்து இங்கே வந்துவிட்டேன்.''

""
உங்களுக்கு நான் வழி காட்டுகிறேன். முதலில் என் இருப்பிடத்திற்குச் சென்று சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.''

வேட்டைக்காரன் யானையின் பின்னால் நடந்தான்.

வேட்டைக்காரனுக்குப் பழங்கள் கொடுத்து உபசரித்தது யானை. குடிப்பதற்கு அருவியிலிருந்து நீர் கொண்டு வந்து கொடுத்தது.

""
என் மீது ஏறிக்கொள்ளுங்கள் அண்ணே. நான் உங்களைக் காட்டு எல்லையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்.''

வேட்டைக்காரன் யானை மீது ஏறிக்கொண்டான். யானை அவனைக் காட்டு எல்லையில் கொண்டுபோய் இறக்கிவிட்டது.

""
ஏதாவது உதவி தேவைப்பட்டால் காட்டிற்கு வாருங்கள் அண்ணே. என்னால் முடிந்ததை நான் உங்களுக்குச் செய்கிறேன்'' என்று விடை கொடுத்தது யானை.

வேட்டைக்காரன் புறப்பட்டுச் சென்றான்.

ஒரு நாள் வேட்டைக்காரன், யானைத் தந்தம் விற்கும் ஒருவனைச் சந்தித்தான்.

""
வேட்டைக்காரனே, நல்ல யானைத் தந்தம் கிடைக்குமா? ஏற்ற விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்'' என்றான் வியாபாரி.

""
யானைத் தந்தம் எவ்வளவு விலை போகும்?'' என்று வேட்டைக்காரன் கேட்டான்.

""
ஒரு அடிக்குப் பத்தாயிரம் ரூபாய்!''

""
பத்தாயிரம் ரூபாயா!'' வியப்பால் விழி பிதுங்க வேட்டைக்காரன் அப்படியே நின்றுவிட்டான். ஒரு அடி நீளமுள்ள யானைத் தந்தம் கிடைப்பதற்கு என்ன வழி?

வேட்டைக்காரனுக்கு வெள்ளை யானையின் நினைவு வந்தது.

முடிந்த உதவியைச் செய்கிறேன் என்று அந்த யானை சொன்னதே!

வேட்டைக்காரன் காட்டிற்குச் சென்றான்.

""
வாருங்கள் அண்ணே, என்ன விஷயம்?'' என்று கேட்டது வெள்ளை யானை.

வேட்டைக்காரன் அழுதபடியே சொன்னான்:""வீட்டில் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறாள். மருத்துவரிடம் காட்டுவதற்குப் பணமில்லை...''

""
அடடா...அழாதீர்கள் அண்ணே. உங்கள் மனைவியின் உடல் நிலை விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். ஆனால், பணம் பற்றிய விஷயம்தான் சிக்கல். என்னிடம் பணமில்லையே!''

""
என் மனைவி சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிடுவாளே...நான் என்ன செய்வேன்...''என்று புலம்பி அழுதான் அவன்.

யானை சிந்தனையில் ஆழ்ந்தது. இந்த நண்பனுக்கு எப்படியாவது உதவி செய்தே ஆகவேண்டுமே என்று நினைத்தது.

சிறிது நேரம் யோசித்த பிறகு யானை சொன்னது:""ஒரு காரியம் செய்யலாம் அண்ணே, என் தந்தத்திலிருந்து கொஞ்சம் ஒடித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை எடுத்துச் சென்று விற்றால், உங்கள் மனைவிக்குச் சிகிச்சையளிப்பதற்கான பணம் கிடைக்கும்...''

வேட்டைக்காரன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. உடைக்குள் மறைத்து வைத்திருந்த சிறிய ரம்பத்தை அவன் வெளியே எடுத்தான்.

யானை படுத்தது.

ஒரு அடி அளவு வைத்து தந்தத்தை வெட்டி எடுத்தான் வேட்டைக்காரன். யானைக்கு மிகக் கடுமையாக வலித்தது. என்றாலும் தன் நண்பனுக்காக அது பொறுத்துக்கொண்டது.

வேட்டைக்காரன் தந்தத்தை எடுத்துச் சென்று விற்றான். கிடைத்த பணத்தையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவு செய்து ஒரு வாரத்திற்குள் தீர்த்துவிட்டான்.

சட்டைப் பை காலியானபோது சிந்திக்கத் தொடங்கினான் அவன்.

யானைத் தந்தம் முழுதும் அப்படியே கிடைத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே...

பேராசையுடன் ஒரு நாள் அவன் மீண்டும் காட்டிற்குச் சென்றான்.

வெள்ளை யானை அன்புடன் வரவேற்று விசாரித்தது:""வாருங்கள் அண்ணே, உங்கள் மனைவியின் நோய் குணமாகிவிட்டதா?''

""
அவளுக்குக் குணமாகிவிட்டது. இப்போது என் பிள்ளைகளுக்கு நோய் வந்துவிட்டது. இனி நான் என்ன செய்வேன்? எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.''

""
உங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதுதான்...''

""
என் பிள்ளைகள் சீக்கிரம் இறந்துவிடுவார்களே...''

""
அழாதீர்கள் அண்ணே, அழாதீர்கள்...''

""
அழாமல் நான் வேறென்ன செய்வேன்?''

""
நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். என் மற்றொரு தந்தத்திலிருந்து கொஞ்சம் ஒடித்துக்கொள்ளுங்கள்... உயிர் காப்பான் தோழன் என்று சொல்லியிருக்கிறார்களே...உங்கள் துன்பத்தைப் போக்க வேண்டியது என் கடமை அல்லவா!''

யானை படுத்தது.

வேட்டைக்காரன், தந்தத்தை ரம்பத்தால் அடியோடுஅறுக்கத் தொடங்கினான். அவசர அவசரமாக அறுத்தான்.

வலி தாங்க முடியாமல் நெளிந்தது யானை. கால்களை உதைத்துக்கொண்டது. தும்பிக்கையால் வேட்டைக்காரனை அகற்றப் பார்த்தது.

அதற்குள் வேட்டைக்காரன், தான் அறுத்து எடுத்ததை ஒரு சாக்கிற்குள் போட்டு எடுத்துக்கொண்டு பாய்ந்தோடிச் சென்றான். யானை துடித்து எழுந்து நிற்கும்போது, ஓடி மறைந்திருந்தான் அவன்.

ரத்தம் பெருகும் முகத்துடன் வெள்ளை யானை கோபம்கொண்டு பிளிறியது:""நன்றி கெட்ட மனிதன்!''

ஊருக்குச் சென்ற வேட்டைக்காரன் யானைத் தந்த வியாபாரியைப் பார்த்தான்.

வியாபாரியிடம் தந்தத்தை விற்பதற்காக அவசரமாக சாக்கைத் திறந்தான்.

பலத்த அதிர்ச்சியடைந்தான் வேட்டைக்காரன்.

யானைத் தந்தத்திற்குப் பதிலாக அங்கே, ஒரு தசைத் துண்டு மட்டும் ரத்தமயமாகக் கிடந்தது.

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved