|

மந்திரச் சேவல்
முன்னொரு காலத்தில் புத்திசாலியான ஒரு மனிதன்
வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் பரம ஏழையாக
இருந்தான்.
ஒருநாள் உள்ளூர் நிலப்பிரபுவின் வீட்டில்
விலையுயர்ந்த பொருள்கள் களவு
போய்விட்டன. என்ன முயற்சி செய்தும் திருடனைக் கண்டுபிடிக்க
முடியவில்லை.
நிலப்பிரபு பெரிய பெரிய மந்திரவாதிகளையும்
சூனியக்காரர்களையும் அழைத்துக்
கேட்டான். எனினும் பயனில்லை. பிறகு ஏழை மனிதனை அழைத்துக்
கலந்தாலோசிக்கும்படி யாரோ யோசனை தெரிவித்தார்கள்.
அவ்வாறே ஏழை வரவழைக்கப்பட்டான். திருட்டுப்போன
தன்னுடைய விலை உயர்ந்த
பொருள்களைக் கண்டுபிடித்துக் கூறும்படி பணக்காரன் சொன்னான்.
திருடனைக்
கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதற்குத் தனக்கு என்ன
பரிசாகக்
கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஏழை
மனிதன் விரும்பினான்.
""உனக்கு
ஒரு குதிரை மந்தையைத் தருகிறேன்''
என்றான் நிலப்பிரபு.
""நல்லது.
மங்கோலியக் கான் உங்களுக்குப் பரிசளித்த
சேவலைக் கொண்டு வரும்படி உங்கள்
வேலைக்காரர்களுக்குக் கூறுங்கள்''
என்றான் ஏழை.
அவ்விதமே நிலப்பிரபு சேவலை கொண்டுவரும்படி
கட்டளையிட்டான். ஏழை மனிதன்
மற்றவர்களுக்குத் தெரியாமல் சேவலின் தலையிலும் கழுத்திலும்
புகைக் கரியைத்
தடவிவிட்டான்;
பிறகு சேவலை ஒரு காலியான,
இருள் கவிந்த கூடாரத்தில்
வைத்தான்.
""இப்போது
ஒவ்வொருவராகக் கூடாரத்திற்குள் செல்லுங்கள்.
சேவலின் தலையைத்
தட்டிக் கொடுங்கள். இது ஒரு சாதாரண சேவலல்ல,
மங்கோலிய மந்திரச் சேவல்
என்பதை மறந்துவிடாதீர்கள். திருடன் தொட்ட உடனேயே அது கூவ
ஆரம்பிக்கும்.
சரி,
இப்போது நீங்கள் உள்ளே சென்று சேவலின் தலையில் உங்கள் இடது
கைகளால்
தட்டிவிட்டு வாருங்கள்''
என்று ஏழை மனிதன் நிலப்பிரபுவின்
வேலைக்காரர்களிடம் கூறினான்.
வேலைக்காரர்கள் பயத்தோடு ஒருவர் பின்
ஒருவராகக் கூடாரத்துக்குள்
நுழைந்தனர். நிலப்பிரபு காதைக் கூர்மையாக்கிக் கொண்டு சேவல்
கூவுகிறதா
என்று உற்றுக் கேட்டான். எல்லா
வேலைக்காரர்களுமே கூடாரத்துக்குள்
சென்றுவிட்டு வெளியே வந்தனர். ஆனால் சேவல்
ஒருமுறைகூடக் கூவவில்லை.
""என்னை
ஏமாற்றப் பார்க்கிறாயா,
பயலே?''
என்று நிலப்பிரபு கோபத்தோடு கத்தினான்.
""சற்றுப்
பொறுங்கள். இன்னும் எல்லாம்
முடிந்துவிடவில்லை...''
என்றான் ஏழை. பிறகு வேலைக்காரர்களைப் பார்த்து
அவன் இவ்வாறு கூறினான்:
""எங்கே
இப்போது உங்கள் இடது கைகளை எல்லாம் தூக்கிக்
காண்பியுங்கள்...''
அனைவரும் கைகளை உயர்த்தினர். ஒருவனது உள்ளங்கை
மட்டும் மிகவும் சுத்தமாக
இருந்தது. அவன்தான் நிலப்பிரபுவின் தலைமை வேலைக்காரன்.
மற்றவர்களின்
கைகளிலெல்லாம் கரி படிந்திருந்தது.
""நீதான்
திருடன்!''
என்று ஏழை கூச்சலிட்டான்.
நிலப்பிரபு அந்த வேலைக்காரனைத் தக்கபடி
தண்டிக்கும்படி உத்தரவிட்டான்;
பின்னர் தான் வாக்களித்தபடி ஏழைக்கு ஒரு மந்தைக் குதிரைகளை
அளித்தான்.
|