|

எறும்பு உணர்த்திய பாடம்
அன்பு ஏழாம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்தான். அவன் அப்பா அவனைக் கூலி வேலை
செய்து,
அன்றாடம் கிடைக்கும்
வருமானத்தில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். ஆனால்,
அன்பு தன் அப்பாவின்
கஷ்டத்தை உணராமல் எப்போதும் டி.வி. பார்த்துக்
கொண்டும்,
தன் நண்பர்களுடன்
அரட்டை அடித்துக் கொண்டும்,
சோம்பேறியாக வீணே பொழுதைக் கழித்துக்
கொண்டிருப்பான். அவனுக்கு படிப்பு என்பது
வேப்பங் காயாய் கசந்தது. தன்
அம்மா சொல்லும் எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டான்.
""போம்மா...
உனக்கு வேற வேலையே இல்லை''
என்று சொல்லி தூங்க ஆரம்பித்து விடுவான்.
""ஏண்டா...
அன்பு,
இது உனக்கே நல்லாயிருக்கா. சும்மா இருந்தா
டி.வி.யைப் பார்த்து
பார்த்து நேரத்தை வீணடிக்கிறே. இல்லேன்னா
படுத்துத் தூங்கறே. எப்போ நீ
படிப்பே. இப்படி சோம்பேறியா இருக்காதேடா''
என்றார்.
அன்பு,
அம்மா சொன்ன வார்த்தைகளைக் கேட்காமல்,
டி.வி.யைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அதைக் கண்டு அன்புவின்
அம்மா வருந்தினார்.
""சரி,
நாளைக்குப் போய் இவனுடைய போக்கைப் பத்தி ஞானம் டீச்சர்கிட்ட
சொல்லணும்''
என்று மனதிற்குள்ளே எண்ணிக் கொண்டார்
அன்புவின் அம்மா. ஞானம் டீச்சர்
மாணவர்களிடம் அன்பாக பழகுவார். அதே சமயம்
கண்டிப்பானவர்.
மறுநாள்
பள்ளிக்குச் சென்ற அன்புவின் அம்மா,
ஞானம் டீச்சரைக் கண்டு,
""டீச்சர்,
அன்பு ரொம்ப சோம்பேறியா இருக்கான். சரியா படிப்பதே இல்லை. ஒண்ணு
டி.வி.யைப்
பார்த்து நேரத்தைப் போக்கறான். இல்லேண்ணா
நண்பர்களுடன் பேசி அரட்டை
அடிக்கிறான். அதுவும் இல்லேண்ணா தூங்கறான்.
படிப்பதே இல்லை. அவனுக்குன்னு
எந்தக் குறிக்கோளும் இல்ல. உற்சாகமே இல்லாம எப்பவும் சோம்பேறியா
இருக்கான்
டீச்சர்''
என்றார்.
அன்பு அம்மாவின் கிழிந்த
உடையையும்,
படபடன்னு அப்பாவியாக பேசியதையும் கேட்ட
டீச்சர் வருந்தினார்.
""இந்தப்
பசங்க ஏன் இப்படி தங்களின் குடும்பக் கஷ்டத்தை உணராமல்
இருக்காங்க?''
என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.
""சரிம்மா,
நீங்க கவலைப்படாதீங்க.
இனிமேல் அன்புவை நான் பார்த்துக்கிறேன்''
என்றார். அன்புவின் அம்மா ஏதோ
பாரத்தைக் கீழே வைத்தது போல நம்பிக்கையுடன் பள்ளியை விட்டு
வீட்டுக்குச்
சென்றார்.
அன்று
டீச்சர் அரையாண்டுத் தேர்வின் திருத்தியத் தாள்களை
மாணவர்களுக்கு வழங்கிக்
கொண்டிருந்தார். வழக்கம் போல் அன்பு குறைவான
மதிப்பெண்களையே
பெற்றிருந்தான். அப்போது தான் டீச்சருக்கு
அன்புவின் அம்மா தன்னை வந்து
சந்தித்தது நினைவுக்கு வந்தது.
""அன்பு,
இது உனக்கே நல்லாயிருக்காப்பா. உன் அப்பா உன்னைக் கூலி வேலை
செய்து படிக்க
வைக்கிறாரு. நீ எப்போதும் டி.வி. உண்டு,
நண்பர்கள் உண்டு,
தூக்கம்
உண்டுன்னு சோம்பேறியா பொழுதை வீணே கழிக்கிற.
பின்ன எப்படி நல்ல மார்க்
வாங்குவே. உனக்குன்னு ஏதாவது குறிக்கோள்
இருக்கணும்பா. அப்போதுதான் நீ
முன்னேறி உன் குடும்பத்துக்கு உதவ முடியும். தன் திறமையை
வளர்த்திட்டவங்க,
அதை டி.வி. மூலமா காண்பிக்கிறாங்க. அவங்க
முன்னேறிட்டாங்க. நீ எப்போ உன்
திறமையை வளர்த்து,
அவங்கள மாதிரி டி.வி.யில தோன்றப் போற. அதுக்கு நீ உன்
நேரத்தை வீணாக்காம,
உனக்குள்ள திறமையை வளர்த்துக்கணும். நீ
இன்னைக்கு
வீட்டுக்குப் போய் சுவரைப் பார்''
என்றார்.
டீச்சர்
சொன்ன வார்த்தைகள்,
அன்பின் நெஞ்சில் சொல்லம்பாய் குத்தியது.
"வீட்டிற்குப் போய் சுவரை பார் என்றாரே'
என்று நினைத்துக் கொண்டு வீட்டில்
புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு சுவரை நோட்டம் விட்டான்.
அப்போது சுவரில்
எறும்புகள் வரிசையாக சென்றுக் கொண்டிருந்தது.
""ச்சீ...
இந்த அற்ப எறும்பையா டீச்சர் பார்க்கச் சொன்னார்''
என்று நினைத்து அன்பு
மீண்டும் படுத்துக் கொண்டே டி.வி.யை பார்க்க
ஆரம்பித்தான்.
அடுத்த நாள் வகுப்பறைக்கு
வந்த ஞானம் டீச்சர்,
""அன்பு...
நேற்று நீ உன் வீட்டுச் சுவற்றில் என்ன
பார்த்தாய்?''
என்று கேட்டார்.
""டீச்சர்...
எங்கள் வீட்டுச் சுவரில் எதுவுமே இல்லை. ஆனால்,
சுவரில் எறும்புகள் தான் வரிசையா போய்க்
கொண்டிருந்தன''
என்றான்.
""அன்பு,
நீ அதை சிறு அற்பப் பூச்சின்னு தானே நினைச்ச. அது நமக்கு
சொல்லித் தரும்
பாடங்களை நீ ஏன் உணரல. எறும்புக் கூட்டம்
எப்போதும் நூல் பிடித்தாற் போல்
வரிசையாக செல்வதை நீ பார்த்திருக்கிறாயா. அது
நமக்கு ஒழுங்கு முறையை
சொல்லிக் கொடுக்குது. எதிர் திசையில் வேறு எறும்பு வந்தால்
அதுகிட்டே இந்த
எறும்பு ஏதோ சொல்லுதே. அது உணவு எங்கே
கிடைக்கும் என்பதைச் சொல்லி,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டும் என்பதை
எடுத்துரைக்குது. கிடைச்ச சிறு
தூசான உணவையும் வாயில் கவ்விக் கொண்டே சிறு தூவரத்தில் நுழைவது,
மழைக்
காலத்தில் உணவு தனக்கு வேண்டும் என்பதற்காக.
இது நமக்கு சேமிக்கும்
பழக்கத்தை கத்துக் கொடுக்குது.
வாயில்
கவ்விக் கொண்டுச் செல்லும் அந்த உணவு கீழே விழுந்தால் அதை
மீண்டும்
மீண்டும் கவ்வி எடுத்துச் சென்று
அங்குமிங்கும் ஓடி செல்வதை நீ
கண்டிருக்கிறாயா?
அது எறும்பின் தளராத முயற்சியையும்,
அயராத உழைப்பையும்,
சுறுசுறுப்பையும் நமக்குக் காட்டுது. எறும்பு
எப்போதுமே சும்மா சோம்பி
இருப்பதில்லை. அது ஓய்வே அறியாமல்
சுறுசுறுப்பாகவும்,
உற்சாகமாகவும் தனது
பணியை செஞ்சிட்டிருக்கு.
எறும்பு சிறியவை,
மெதுவாக ஊர்ந்துச் செல்லும்
என்றாலும்,
அவை தொடர்ந்து சென்றால் கல்லும் தேய்ந்து
போகும். கல்தானே
என்றிருக்காமல் தொடர்ந்து முயன்றால் எந்தக்
காரியத்திலும் வெற்றியடையலாம்
என்பதை எறும்பு நமக்கு உணர்த்துகிறது.
எந்தப்
பாதிப்பும் இல்லாமலிருந்தால் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழும்.
மூன்றறிவுப் படைத்த அந்த எறும்புக்கு இருக்கும் சுறுசுறுப்பு
கூட உனக்கு
இல்லையேப்பா. நீ சுறுசுறுப்பா இருந்தா
கண்டிப்பா நல்லா படிப்பே. இனிமே நீ
நல்லா படிக்கணும்னா,
எப்போதும் சுறுசுறுப்பா இருக்கணும். மனசில ஏதாவது
குறிக்கோளை வச்சுக்கோ. அப்போ நீ நிறைய மார்க் வாங்குவே''
என்றார்.
ஞானம்
டீச்சர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட அன்புவின் முகம் சோம்பலை
முறித்த சுடர்
முகமாய் பிரகாசித்தது. இருண்ட அவனது
உள்ளத்தில் நம்பிக்கை
மின்னல்
வெட்டியது. ""டீச்சர்,
இனிமேல் நான் சோம்பேறியாக இருக்கமாட்டேன்.
எறும்பைப்
போல் சுறுசுறுப்பா இருந்து படிப்பேன். நல்ல மார்க் வாங்கி
பள்ளிக்கும்,
வீட்டுக்கும்,
ஏன் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பேன்''
என்றான். அதைக் கேட்ட
டீச்சரின் உள்ளம் பூரித்தது.
|