|
தொடக்கம்:
வெல்லுதமிழ் இலக்கியத்தின்,
நல் இலக்;கணமாய்த்
திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும். அது
மட்டுமா?
பல்லாயிரம் ஆண்டுகளாய்த் தமிழ் பண்பாட்டையும்,
தலையாய நெறிமுறைகளையும்,
பாதுகாத்து வரும் வரலாற்று பெட்டகமும் இதுவே
ஆகும். அதனால் தான் திருக்குறளை ஒரு தௌ;ளுதமிழ்
கருவூலம் என்போம். மேலும் மண்ணுலகில் வாழும்
மாந்தரினம் யாவும் நன்முறையில் வாழ
வழிகாட்டுவதில்,
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் என்றும்
பூரிப்புடன் புகழ்கிறோம்.
திருக்குறளின் அமைப்பு:
எக்குறளைப் படிப்பினும். அக்குறள் அரிய
பொருள்களை நல்கும். மனித வாழ்வில் முதலில்
பிறப்பும்,
முடிவில் இறப்பும் அமைகிறது. அதனை ஒருவகையால்
ஒப்பற்ற முறையால்,
நம் திருவள்ளுவர் தெளிவாகவே தமிழின் முதல்
எழுத்தான அகர
முதல் எழுத்தெல்லாம்
எனத்தொடங்கி கடைசி எழுத்தான னகரத்தில்(ன்)
ஊடுதல் காமத்திற்கு இன்பம்;;;,
அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் (1330)
என்று முடித்துள்ளார்.
கடவுள் வாழத்;தும்
வான் சிறப்பும்;:
எண்சாண் உடம்பிற்குத் தலையே முதன்மையாகும்.
ஆகவே,
எண்குணத்தானாகிய இறைவனின் திருவடிகளை முதலில்
தலையாலே மிக மிக அவசியம். அதன் பொருட்டே
திருக்குறளின் முதல் அதிகாரமாக கடவுள்
வாழ்த்தை அமைத்து,
பத்துக் குறள்வழி,
பகவனைப் போற்ற நம்மை,
ஆற்றுப் படுத்துகின்றார்.
கடவுள் வாழ்த்துக்குப்பின் கண்ணில் காணும்
கடவுளாக மழையையே கருதி வான்சிறப்பு என்னும்
தலைப்பில் வளமாகப் பேசுகின்றார். அதில் ஒன்று
சிறப்பொடு
பூசனை செல்லாது,
வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18)
என்னும் குறள். இக்குறள்வழி கடவுளைப் பூசை
செய்வதற்கும் அடிப்படை வானமாகிய மழைதான் என்று
வரையறுத்துக் கூறுகின்றார் எனின்
ஏனையவற்றிற்கும் இஃது அவசியமன்றோ!
மனிதவாழ்வு:
ஒருமனிதன் வாழ்வில் எவ்வாறெல்லாம் இருக்க
வேண்டும்,
எவற்றையெல்லாம் கொள்ள வேண்டும்,
எவற்றை எல்லாம் தள்ளவேண்டும் என்பதையெல்லாம்,
இரண்டே அடிகளில்,
இரத்தினச் சுருக்கமாக,
இக்காலத்து மக்களுக்கு பொருந்தும் வகையில்,
அக்காலத்திலேயே எழுதியுள்ளார் என்பதை
எண்ணியெண்ணி வியக்கின்றோம். இன்பத்தில்
ஆழ்கிறோம்,
பூரிப்பால் புளகாங்கிதம் அடைகிறோம். நம்
வள்ளுவப் பேராசான்,
நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாக்
கருத்துகழையும்,
ஏற்றவாறு தம் திருக்குறளின் குறிப்;பிட்டுச்
சொல்லியிருப்பதால்லதான் இது ஒரு வாழ்வியல்நூல்
என்பது நிரூபணம் ஆகிறது.
குடும்ப வாழ்வு:
ஒருவன் தந்தையாக இருக்கும்பொழுது தன் மகனைக்
கற்றோர் கூட்டத்தில் முன் நிற்பவனாகச் செய்தல்
வேண்டும்,
அம்மகன் வளர்ந்து எதிர்கால வாழ்க்கையில்
சான்றோனாக விளங்க வேண்டும் என்பதை
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்,
தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய். (69)
என்னும் குறளின் மூலம் விளக்கியுள்ளார்.
அம்மகன் நல்ல சான்றோனாக மட்டுமன்றி எல்லோரும்
போற்ற ஏற்றவாறு வாழ்ந்து தன் தந்தைக்குப்
பெருமையைத் தேடித்தர வேண்டுமென்பதை,
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்
எனுஞ் சொல். (70)
என்றும் எடுத்துக் கூறுகின்றார். அவன் அன்போடு
வளர வேண்டும் என்பதை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்,
அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (72)
என்னும் குறளாலும் அவன் அடக்கத்தோடு வாழ்தல்
வேண்டும் என்பதனை,
அடக்கம் அமரருள் உய்க்கும்,
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள்
121)
என்பதைக் கூறிவிட்டு அவன் ஆமைபோல்
ஐம்பொறிகளையும் அடக்கவேண்டும் என்று
வலியுறுத்தி,
குறிப்பாக நாவையாவது கட்டாயம் அடக்க வேண்டும்
என்பதற்காக
யாகாவார் ஆயினும் நாகாக்க,
காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)
என்றும் தெளிவுபடுத்துகிறார். அப்படி ஒருகால்
நாவை அடக்காமல் இழிசொல்லும்,
பழிசொல்லும் பேசிவிட்டால் என்னவாகும்?
என்று கேட்போர்க்கு
தீயினால் சுட்டபுண் உள்ளாறும்,
ஆறாதே
நாவினால் சுட்ட வடு (129)
என்னும் குறள்மூலம் எடுத்துரைத்து
எச்சரிக்கையும் செய்கின்றார்.
இவையெல்லாம் நிகழாமல் இருப்பதற்காக
இனியசொல்லையே பேச வேண்டும் என்பதை
இனியஉளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று, (100)
என்றும்,
பயனில்லாத சொற்களைப் பேசி பொன்னான,
போனால் வாராத காலத்தை வீணாக்க வேண்டாம்
என்பதற்காக
சொல்லுக சொல்லிற் பயனுடைய,
சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (200)
என்றும,;
இனிதே குறிப்பிட்டு,
நமக்கு வாழ்வில் நல்வழி காட்டுகின்றார். நம்
வள்ளுவப் பேராசான். ஆகவேதான் முப்பால் ஒரு
வாழ்வியல்நூல் என்பதனை எப்பாலவரும் தப்பாமல்
ஒப்புக்கொள்கின்றனர்.
கல்வியும் வாழ்வும்:
மேலும் மேதினியில் வாழ்வோர் யாவரும்
கற்கவேண்டும் என்பதனைக் கேடில்
விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை
யவை (400)
என்று கூறிவிட்டுப் பின்,
கற்றால் மட்டும் போதாது,
கற்றபடி அதற்றே;ப
நடக்க வேண்டும் என்பதனைக்
கற்க
கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
(391)
என்றும,;
வலியுறுத்தியுள்ளார். அடுத்து அவன் வளர்ந்து
இல்வாழ்க்கை ஏற்று தாய்,
தந்தை சுற்றத்தார் முதல் அனைவருக்கும் ஆதரவு
காட்டி துணையாக விளங்கி வையத்துள் வாழ்வாங்கு
வாழ நல்வழி காட்டுகின்றார். அதன்பின் அவன்
வாழ்க்கைத் துணை பற்றிக் கூறுங்கால்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)
என்றும்,
அவள் வாழ்க்கையில் மக்கட் செல்வம் பெற்று-
அவர்தம் மழலைச் சொற்களைக் கேட்டு குழலிசையாக,
யாழிசையாக எண்ணி இன்புறுதல் வேண்டுமென்றும்,
பின் முறைப்படி வளர்த்துத் தம்மக்களை அறிவில்
வல்லவராக்கி,
மாநிலத்தாரும் அவன் ஆற்றலைக் கண்டு
இன்புற்றுச் செய்ய வேண்டும் என்பதை,
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்(கு) எல்லாம் இனிது (68)
என்னும் குறள்வழியும் புலப்படுத்தி
விடுகின்றார்.
நட்பு:
அது மட்டுமா?
அவன் சமுதாயத்தில் பலரை நட்பாகக்கொண்டு
பழகி,
நண்பனாக இருக்கும் போது
உடுக்கை இழந்தவன் கைபோல,
ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
(788)
என்றும்,
பிறர் தனக்குத் துன்பம் செய்தாலும்,
அவருக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்பதை
இன்னாசெய் தாரை ஒறுத்தல்,
அவர் நாண
நன்னயஞ் செய்து விடல் (314)
என்றும் வழிகாட்டுகின்றார்.
அன்பும் பண்பும்:
இவ்வாறு அன்பையும் அறத்தையும் போற்றி
ஒழுகினால் பண்பும் பயனும் பெற்று அவனுடைய
இல்லறம்
நல்லறம் ஆகும் என்பதனை
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)
என்னும் பாடல்வழி நயம்பட எடுத்துரைக்கின்றார்.
பலவகையில்
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை,
வாழ்க்கை முழுவதும் கைகொள்ள வேண்டிய அறங்களை
எல்லாம்,
தொகுத்தும் வகுத்தும் தொடர்ந்து காட்டி
வருவதால்
திருக்குறளை,
ஒரு வாழ்வியல் நூல் என்று குறிப்பிடுவதலே
சாலச் சிறந்தாகும்.
அரசியல்:
திருவள்ளுவர்,
சாதாரண மக்களின் வாழ்வைப் பற்றி மட்டுமல்லாமல்,
அரசியல்,
அங்கவியல் பற்றியும் அற்புதமாகக்
கூறியுள்ளார். அவர் மன்னரைப் பற்றிக்
குறிப்பிடும் போது
முறை
செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
(388)
என்றும்,
அவர் பெரியாரைத் துணை கோடல் வேண்டும் என்பதை
இடிப்பாரை
இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (488)
என்றும் அவருடைய அமைச்சர்
அறிகொன்று
அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன் (638)
என்றும் அவருடைய படைவீரர்கள்
கூற்றுடன்று
மேல்வீரனும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை (765)
என்றும் இப்படிப் பலவாறு கண்ணோட்டம் ஒற்றாடல்
வரை ஒவ்வொன்றாக நிரல்பட எடுத்துரைத்து நம்
நெஞ்சைக் கவர்ந்து விடுகிறார். மேலும் பொது
மக்களின் நலங்குறித்தும் போதுமான அளவு
பொருத்தமானக் கருத்துக்களைக் திருத்தமாகப் பல
அதிகாரங்களில்,
பாங்குடன் குறிப்பிடப்பட்டுள்ளார். அதனால்
தான் அவர் ஆய்ந்து ஆய்ந்து தோய்;ந்து
தோய்ந்து எழுதிய திருக்குறளை ஒரு வாழ்வியல்
நூல் என்பது உறுதியளிக்கின்றது.
புகழ்பெறும் வழி:
முடிவாகக் சுருங்கச் சொல்வதாயின் மக்கள்,
அறத்தான்
வருவதே இன்பம;
என்பதை அறிந்து, ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்
என்பதை உணர்ந்து,
தன் நெஞ்சு அறிவதைப் பொய்யாமல் போற்றி,
உள்ளுவதெல்லாம் உயர்வையே உள்ளி,
புகழ்ந்தவைப் போற்றிச் செய்து,
திண்ணிய எண்ணங்கொண்டு ஈடுபட்டால்
எல்லாவகையிலும் ஏற்றம் பெறுவர். ஊழையும்
உப்பாக்கம் கண்டு ஒப்பிலாப் புகழின் உச்சியைத்
தொட்டு ஊரார் மெச்சும்படி வாழ்வர். அதனால்தான்
திருக்குறள் ஒரு வாழ்விவல் நூல் என்று
கூரை மேல் ஏறியும் கூறுவேன் மாடியின்மேல்
ஏறியும் முழங்குவேன்.
மலையுச்சியின்மேல் நின்றும் உரக்கச் சொல்வேன்.
அறிவு ஊற்று:
திருக்குறள் என்னும் அறிவுக் கேணியை,
ஆய்ந்த அகழ்வார் எவரும்,
மற்றொன்றைத் தாவிச் செல்லார். அவர் ஆவி;
முழுவதும்,
புவியில் புகழ்பட வாழ வேண்டிய
வழிமுறைகளையெல்லாம்,
வெளிபபடுத்தம் அறிவு ஊற்றாக இருப்பது
திருக்குறள் ஒன்றே என்று துணிந்து கூறலாம்.
மனிதன்,
மகத்தான வாழ்வியல் கருத்துகள் அத்தனையும்,
இரண்டே அடிகளில் சுருங்கச் சொல்லி
விளக்கவைக்கும் ஆற்றல் நண்குணர்ந்த நம்
தமிழ்ப்பாட்டியாம் ஒளவை மூதாட்டி
அணுவைத் துளைத்(து)ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்
என்று இதனைப் பாராட்டியுள்ளார்.
முடிவுரை:
இதற்கு மேல் எடுத்தரைக்க என்ன இருக்கிறது?
இத்தகு வித்தகம் சான்ற வாழ்வியல் நூலை
உணர்ந்து,
உணர்ந்து வாசித்தல் வேண்டும் அல்லவா! அவ்வாறு
வாசிக்கத் தொடங்கின் வாழ்வியல் நெறிகள்
புரிந்து விடும். மதி ஒளிரத் தொடங்கும்;
மயக்கம் தயக்கமின்றித் தானாய் ஒடும் பண்பாடு
இறக்கும்,
பாரெல்லாம் உயரும்.
ஆகவே நாம்,
நாளும் ஒரு குறளையேனும் கற்பதை நம் அன்றாடக்
கடமையாகக் கொள்வோம். அன்னைத் தமிழின்
பண்பாட்டைப் பேணி வளர்ப்போம். மனிதனைப்
புனிதமாக்கும் திருக்குறளை வாழ்வியல் நூல்தான்
என்பதை நிலைநாட்டுவோம். வாரீர்! வாரீர்!!
Home |