|

அன்பான
பெற்றோர்களே
வணக்கம்!
புலம்பெயர்ந்து
தனியே
ஐரோப்பாவில்
குடிபுகுந்த
நாம்
இன்று
குடும்பங்களாய்
எமது
பிள்ளைகளை
இந்த
மண்ணிலேயே
வாழ்வதற்கான
வழிமுறைகளை
செய்துகொடுப்பவர்களாய்
மாறியுள்ளோம்.
நாம்
உலகில்
பரந்துபட்டு
வாழ்ந்தாலும்
நாம்
வாழும்
நாட்டு
மக்களோடு
ஏதோ
ஓர்
விதத்தில்
தனிமைப்பட்டவர்களாகவே
வாழ்ந்து
வருகிறோம்
என்பது
யதார்த்தமான
உண்மை.
நாம்
யார்?
ஏன்
இங்கு
வந்தோம்!
எமது
அடுத்த
தலைமுறை
இங்கு
எவ்வாறு
வாழப்போகிறது.
பெரும்பாலும்
இக்கேள்விகளுக்குப்
பதில்
தெரியாதவர்களாகவே
நாமும்,
நாம்
சார்ந்து
வாழும்
மக்களும்
உள்ளோம்.
எமது
அடுத்த
தலைமுறை
இங்கு
செழிப்புடன்
தலைநிமிர்ந்து
வாழவேண்டுமாயின்
அதற்கான
புறச்சூழலை
உருவாக்கிக்கொடுப்பது
எமது
கடமை.
இது
காலத்தின்
தேவை!
இத்
தேவையை
கருத்தில்க்கொண்டு
கானவி.கொம்
இணையத்தளம்
மற்றும்
சிறுவர்
மாத
இதழ்
இரண்டையும்
நடாத்திவரும்
நாம்
தற்போது
மிகப்
பிரம்மாண்டமான
முறையில்
எம்
சிறார்களிடயே
ஐரோப்பா
தழுவிய
ஓவியக்கண்காட்சி
ஒன்றை
நடாத்தவுள்ளோம்.
இவ்
ஓவியக்கண்காட்சியானது
இணையத்தளத்தினூடாக
நடாத்துவதால்
ஐரோப்பாவில்
மட்டு-
மன்றி
உலகில்
உள்ள
அனைத்து
மக்களையும்
பார்வையிடச்செய்வதே
எமது
நோக்கம்.
குறிப்பாக
ஐரோப்பாவில்
உள்ள
பாடசாலைகள்,
பல்கலைக்கழகங்கள்,
ஓவியத்துறை
தொடர்பான
கலைஞர்கள்
அனைவருக்கும்
அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்படும்.
இவ்
ஓவியக்கண்காட்சிக்கென
6
மொழிகளில்
மிகப்பிரம்மாண்டமாக
இணையத்தளங்களையும்
உருவாக்கிவருகிறோம்.
இவ்
இணைய ஓவியக்கண்காட்சியை
Google, Yahoo, MSN, Search.ch, Facebook
போன்ற தளங்களின் ஊடாக அனைத்து மக்களையும் சென்றடைய ஏற்பாடும்
செய்துள்ளோம்.
இவ் இணைய
ஓவியக்கண்காட்சியில் பங்குபற்றும் சிறுவர்களது அங்கத்துவ
இலக்கம், பெயர், புகைப்படம்
(உங்கள் விருப்பம்),
பிறந்த திகதி, நாடு,
என்பன சேர்த்துக்கொள்ளப்படும்.
பங்குபற்றும்
அனைத்து ஓவியத்திற்கும்
6
மொழிகளிழும்
விருப்பம்போல்
கருத்துக்கள் எழுத முடியும். இதன்மூலம்
உங்கள் பிள்ளைகளின் திறமைகளை பெற்றோர்களாகிய நீங்கள் அறிய
வாய்ப்பு உண்டாகும்.
8வயதில்
இருந்து
19
வயதிற்க்கு
உட்பட்ட
அனைவரும்
இவ்
ஓவியக்கண்காட்சியில்
பங்குபற்ற
வேண்டும்
என்பதே
எமது
ஆசை.
இவ்
ஓவியக்கண்காட்சியில்
பங்குபற்றுவதற்கு
தேவையான
படிவத்தோடு
சேர்த்து
24
பக்கம்
கொண்ட
சிறுவர்
ஓவியப்புத்தகம்
ஒன்றையும்
உங்களுக்கு
வழங்குகிறோம்.
இவ்
ஓவியப்
புத்தகம்
சிறுவர்களுக்கு
மிகவும்
பயனுள்ளதாக
இருக்கும்
என்பதில்
ஐயமில்லை.
ஒரு
ஓவியம்
ஆயிரம்
வார்த்தைகளுக்கு
சமமானது
என்பார்கள்.
நாம்
விரும்புவதை
ஓவியத்தினூடாக
மிகவும்
எளிமையாக
சொல்லிவிட
முடியும்.
எம்மையும்
எமது
சிறார்களின்
ஆளுமைபற்றியும்
இவ்
உலகிற்கு
எடுத்துக்காட்ட
ஓர்
அரிய
சந்தர்ப்பம்
இதுவாகும்.
அன்பான
பெற்றோர்களே!
எங்கள்
இவ்
முயற்சிக்கு
ஆக்கமும்
ஊக்கமும்
தந்து
உங்கள்
பிள்ளைகளுக்கு
ஓர்
சந்தர்ப்பத்தை
உருவாக்கிக்கொடுங்கள்.
|