ADD

ADD

ADD

முன் பக்கம்

எம்மைப்பற்றி

வயது எல்லை

விதி முறை

அனுப்பும் முறை

இணையக் கண்காட்சி

தொடர்பு கொள்ள

ஓவியக்கண்காட்சிக்கான

சிறப்பு இணையத்தளம் மிகப்பிரமாண்டமாக

6 மொழிகளில்

 உருவாக்கப்பட்டு வருகிறது

 

 

இணைய ஓவியக்கண்காட்சி


 

ஐரோப்பா முழுவதும் இருந்து எமக்கு அனுப்பப்படும் அனைத்து ஓவியங்களும் கண்காட்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

 

இவ் ஓவிய கண்காட்சிக்கு என 6 மொழிகளில் மிக பிரமாண்டமாக இணையத்தளம் எம்மால் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

இவ் ஓவியக் கண்காட்சி மார்கழி மாத நடுப்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

 

இவ் ஓவியக் கண்காட்சியை உலகில் உள்ள அனைவரும்  பார்வையிட முடியும்.

               

குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஓவியத்துறை தொடர்பான கலைஞர்கள் அனைவருக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

 

இவ் ஓவிய கண்காட்சியானது ஐரோப்பா தமிழ்ச் சிறார்களின் திறமையை ஐரோப்பா மக்களுக்கு வெளிப்படுத்த மட்டுமின்றி உங்கள்  ஆளுமைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் ஓர் சந்தர்ப்பமாக அமையும்.

 

எனவே அனைத்து தமிழ்ச் சிறார்களும் இவ் இனைய ஓவிய கண்காட்சியில் பங்குகொள்ளுமாறு

அன்புடன் அழைக்கின்றோம்.

 

ஓவியம் தொடர்பான இறுதி முடிவு


நாடுகள் இடையே இருந்து வந்த ஓவியங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளுக்கிடையேயே 1,2,3ம் இடம் என தரம் பிரித்து சிறப்பு பரிசுகளும் மற்றும் ஆறுதல் பரிசில்களும்  வழங்கப்படும்.

 

நாடுகள் தோறும் 1,2,3ம் இடம் வந்தவர்கள் அனைவரும் எமது கண்காணிப்பின் கீழ் அந்தந்த நாடுகளில் ஓவியம் வரையும் போட்டி நடத்தி இறுதியாக தேர்வு செய்யும் ஒருவரிற்கு 2011ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் சிறந்த ஓவியருக்கான சிறப்பு விருது வழங்கப்படும்.

 

ஓவியம் தரம்பிரிக்கப்பட்டு எமது நிர்வாகம் எடுக்கும் முடிவே  இருதியானதாகும்.

 

 

மாணவர்களுக்கு...


நீங்கள் கல்விகற்கும் பாடசாலை மற்றும் பல்கலைக்களக இணைய மற்றும் மின்னஞ்சல் முகவரியை எமக்குத் தந்துதவுங்கள்.

எமது மின்னஞ்சல் முகவரி:  kanavy@hotmail.de

 

ஏனையவர்களுக்கு...


நீங்கள் பணிபுரியும் வேலைத்தளங்கள் மற்றும் ஏனையவர்களின் இணைய மற்றும் மின்னஞ்சல் முகவரியை எமக்கு தந்துதவுங்கள். 

 எமது மின்னஞ்சல் முகவரி:  kanavy@hotmail.de

 

 

copyright © 2010 kanavy.com. All rights reserved